என் மலர்

    செய்திகள்

    காஷ்மீரில் மாணவர்களுக்கு எதிராக இரக்கமற்ற தாக்குதல்: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு
    X

    காஷ்மீரில் மாணவர்களுக்கு எதிராக இரக்கமற்ற தாக்குதல்: ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களுக்கு எதிராக அரசு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதலில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

    பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களுக்கு எதிராக அரசு இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்துவதாக எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா குற்றச்சாட்டியுள்ளார்.

    ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஃபரூக், “நாங்கள் மாணவர்களுக்கு ஆதரவாக உறுதியுடன் நிற்போம். இளைஞர்கள் மீதான கருணையற்ற தாக்குதல்களை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
    Next Story
    ×