என் மலர்

    செய்திகள்

    கலாபவன் மணி மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்: கேரள டி.ஜி.பி. தகவல்
    X

    கலாபவன் மணி மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்: கேரள டி.ஜி.பி. தகவல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கலாபவன் மணி மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாகவும், இது தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கேரள டி.ஜி.பி. தகவல் தெரிவித்துள்ளார்
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாலக்குடியைச் சேர்ந்தவர் நடிகர் கலாபவன் மணி. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த இவர், ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர் சாலக்குடியில் உள்ள பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் கலாபவன் மணி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகவும், அதனால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து கலாபவன் மணியின் உடல் உறுப்புகள் ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

    அதில், கலாபவன் மணியின் உடலில் வி‌ஷம் கலந்திருந்ததாக தெரிய வந்தது. இதனால் அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இதுபற்றி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். கலாபவன் மணியின் நண்பர்கள், உறவினர்கள், பண்ணை வீட்டில் பணிபுரிந்தவர்கள், சினிமா உலகில் நெருக்கமானவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் மற்றும் சாலக்குடி பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் உள்பட 290 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் கலாபவன் மணி மரணம்குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே கலாபவன் மணி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று அவரது சகோதரரும், மனைவி நிம்மியும் மனு கொடுத்தனர். மனித உரிமை ஆணையமும் இதுபற்றிய தகவலை கேரள அரசிடம் கேட்டது.

    அதில், கலாபவன் மணியின் சாவு இயற்கை மரணமா? இல்லை தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பதை தெரிவிக்க வேண்டுமென்று கோரி இருந்தது.

    இதற்கு கேரள போலீசார் வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருப்பதாகவும், கலாபவன் மணியின் நெருங்கிய நண்பர்கள் 6 பேரிடம் இன்னும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் கூறி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா, மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில், கலாபவன் மணி மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாகவும், இது தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், கூறி உள்ளார்.

    எனவே கலாபவன் மணி மரணம் குறித்த விசாரணையை இனி சி.பி.ஐ. மேற்கொள்ளும் என தெரிகிறது.
    Next Story
    ×