என் மலர்

    செய்திகள்

    காஞ்சிபுரம்: பழமையான சிலையின் தன்மை அறிய மைக்ரோபோட்டோ- தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர்
    X

    காஞ்சிபுரம்: பழமையான சிலையின் தன்மை அறிய மைக்ரோபோட்டோ- தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காஞ்சீபுரம் கோவிலில் உள்ள சிலையின் பழமையை அறிய மைக்ரோபோட்டோ எடுக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    பிரசித்திபெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்ற தாக புகார் எழுந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் சிலை 4.75 கிலோ தங்கத்தினை பயன்படுத்தி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து சிலையை ஆய்வு செய்த போது அதில் கடுகளவு தங்கம் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வருகை தந்து நேரில் ஆய்வு மேற் கொண்டார்.

    புதிய உற்சவ சிலை குறித்து பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் முன்னிலையில் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி கோவிலில் உள்ள பழைய மற்றும் புதிய சோமாஸ்கந்தர் உற்சவ சிலைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, “காஞ்சீபுரம் கோவிலில் உள்ள சிலையின் பழமையை அறிய மைக்ரோபோட்டோ எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்கால சிலைகளில் தங்கம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

    பழமை வாய்ந்த பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் சிலை செய்யப்பட்டத்தில் ஏராளமான தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாகவும் கோவிலில் மேலும் பழமைவாய்ந்த சிலைகள் காணாமல் போய் உள்ளதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்சி வருகிறார்கள்.

    இதுகுறித்து விரைவான விசாரணை மேற்கொண்டு உண்மைநிலையை வெளியே கொண்டு வரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×