என் மலர்

    செய்திகள்

    வகுப்பறையில் மாணவன் பலி: ஆசிரியர் தண்டனை வழங்கியதால் இறந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு
    X

    வகுப்பறையில் மாணவன் பலி: ஆசிரியர் தண்டனை வழங்கியதால் இறந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்ததையடுத்து, அவரது மரணத்திற்கு ஆசிரியர் தான் காரணம் எனக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
    சென்னை:

    சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர், அம்பத்தூரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சித்ரபாவை. இவர்களுக்கு ரேஷ்மா (வயது 18) என்ற மகளும், நரேந்தர்(15) என்ற மகனும் உள்ளனர்.

    ரேஷ்மா, சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நரேந்தர், திரு.வி.க. நகர் பல்லவன் சாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இறைவணக்கம் முடிந்து மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்கு திரும்பினர். 

    வகுப்பறைக்கு வந்து அமர்ந்து இருந்த நரேந்தர், திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர்.

    ஆனால் நரேந்தர், சுயநினைவு இன்றி இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவர் நரேந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி திரு.வி.க. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சென்னை வடக்கு மாவட்ட கல்வி அதிகாரி பசுபதி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி மனோகரன் ஆகியோர் அந்த தனியார் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் அருள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடமும் மாணவரின் சாவு குறித்து விசாரணை நடத்தினர். 



    மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவனின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவனுக்கு உடற்கல்வி ஆசிரியர் தண்டனை வழங்கியதால் மாணவன் மயங்கி விழுந்து இறந்ததாக குற்றம்சாட்டி இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். 

    இதுதொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். #tamilnews
    Next Story
    ×