என் மலர்

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பூ வியாபாரி பலி
    X

    புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பூ வியாபாரி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பூ வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங் குறிச்சியில் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இதனை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து இன்று புதுக்கோட்டை அருகே உள்ள வடமலாப்பூர் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 450 காளைகளும், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

    சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கி பரிசுகளை வென்றனர். இதேபோல் பல காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி களத்தில் நின்று விளையாடியது. அதன் உரிமையாளர்களும் பல்வேறு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

    இந்த நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியே சீறிப் பாய்ந்த காளை ஒன்று வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. அந்த காளை ஒருசில நிமிடங்கள் வரை களத்தில் பார்வையாளர்களை மிரட்டியது.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த காளை பார்வையாளர்கள் கூட்டத்தில் திடீரென பாய்ந்தது. இதில் புதுக்கோட்டையை அடுத்த கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி ஜீவா (வயது 42) என்பவர் மீது பாய்ந்தது.

    அவரது கழுத்தை தனது கூரிய கொம்பால் குத்தி தூக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். உடனே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்ற காளையை துரத்தினர். அதன்பின்னரே பார்வையார்கள் பெரு மூச்சு விட்டனர். பலியான பார்வையாளர் ஜீவாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டு பார்க்க வந்து பூ வியாபாரி ஒருவர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×