என் மலர்

    செய்திகள்

    பஸ் விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
    X

    பஸ் விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையில் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    இதுதொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், பலக்கனூத்து கிராமம், திண்டுக்கல்-பழனி நெடுஞ்சாலையில் 31.12.2017 அன்று திண்டுக்கல்லில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.

    அவ்விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இங்களம் என்பவரின் மகன் விஸ்வநாதன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி, கோவை மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி புவனேஸ்வரி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மனைவி நாகஜோதி, பாண்டியராஜன் என்பவரின் மகன் சபரி, மெர்ஸோன் என்பவரின் மகன் ஜோ டேனியல், ஆனந்தன் என்பவரின் மகன் வசீகரன், சோலையப்பன் என்பவரின் மனைவி போதுமணி, அப்துல்காதர் என்பவரின் மகன் ஹைதர் அலி மற்றும் சக்திவேல் என்பவரின் மனைவி நாகலெட்சுமி ஆகிய 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்து குறித்த செய்தியை அறிந்தவுடன், மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திந்து அவர்களுக்கு ஆறுதல் கூறவும், காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நான் விபத்து நடந்த அன்றே உத்தரவிட்டிருந்தேன்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×