என் மலர்

    செய்திகள்

    வருமான வரித்துறை சோதனை: போயஸ் கார்டனில் மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் கைது
    X

    வருமான வரித்துறை சோதனை: போயஸ் கார்டனில் மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெயா டிவி சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் சென்றார். அதிமுக தொண்டர்களும் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, தினகரன் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். மேலும், அங்கு குவிந்திருந்த தொண்டர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். இதனால் போயஸ் கார்டனில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×