என் மலர்

    செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா பாதுகாப்பு குறித்து ஏ.டி.ஜி.பி. ஆய்வு
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா பாதுகாப்பு குறித்து ஏ.டி.ஜி.பி. ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழக காவல் துறை கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் நேற்று ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதைத் தொடர்ந்து 29-ந் தேதி மகாதேரோட்டமும், டிசம்பர் 2-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். தீபத் திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை கூடுதல் டி.ஜி.பி. விஜயக்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், டி.ஐ.ஜி.வனிதா, எஸ்.பி. (பொறுப்பு)பகலவன், ஏ.டி.எஸ்.பி. ரங்கராஜன், ஏ.எஸ்.பி. ரவளிப்பிரியா, டி.எஸ்.பி. குணசேகரன், கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    முன்னதாக, தீபத்திரு விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, அதிகாலையில் பரணி தீபத்திற்கு எவ்வளவு பக்தர்கள் அனுமதிக்கலாம், பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவிப்பதை தடுக்கும் வகையில் போதிய வசதிகளை ஏற்படுத்துவது, அதேபோல் மாலையில் மகாதீபம் தரிசிக்க அனுமதிக்கப்படும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    Next Story
    ×