என் மலர்

    செய்திகள்

    கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு: அரசியலில் குதிக்க கமல் முன்னோட்டம்
    X

    கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு: அரசியலில் குதிக்க கமல் முன்னோட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் கமல்ஹாசன் கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததை அடுத்து மக்களிடம் குறைகள் கேட்டறிந்த நடவடிக்கை அவரது அரசியல் பிரவேசத்திற்கான முன்னோட்டமா?

    சென்னை:

    நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று சொல்லி தனது அரசியல் ஆர்வத்தையும், அரசியலுக்கு வரும் விருப்பத்தையும் ஏற்கனவே கமல் வெளியிட்டுவிட்டார்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தால் அடுத்த தலைவருக்கான தேடல் அதிகமாகவே இருக்கிறது. இதை பயன்படுத்தி மக்கள் ஆதரவை திரட்டி தலைமை பதவியை கைப்பற்றும் ஆசையில் அரசியல் கட்சிகள் போட்டி போடுவது வாடிக்கையானதுதான்.

    ஆனால் முன்னணி நாயகன் என்ற அந்தஸ்தில் இருக்கும் கமலும் முன்னணி தலைவருக்கான தகுதி போட்டியில் இறங்கி இருக்கிறார்.

    ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே தனது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தன் மீதான எதிர்பார்ப்பை வேகம் குறையாமல் பார்த்து கொண்டார்.

    முதல் முறையாக குறிப்பிட்ட ஒரு மக்கள் பிரச்சினையை கையில் எடுத்தது எதிர்பாராதது. எண்ணூர் அனல் மின்நிலைய கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலக்கப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்ற பிரச்சினையை கிளப்பினார்.

    பிரச்சினையை சொன்னதோடு நேரடியாகவும் களத்தில் இறங்கி பார்வையிட்டு பொதுமக்கள், இளைஞர்களை சந்தித்து அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கருத்தும் கேட்டார்.

    கமல் எடுத்துள்ள இந்த திடீர் விசுவரூபம் அரசியல் தளத்தில் அவர் அடுத்த கட்டத்தை நோக்கி கச்சிதமாகவே நகர்ந்து வருவதாக கணிக்கிறார்கள்.

    7-ந்தேதி சில முக்கியமான முடிவுகளை அறிவிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். அன்றைய தினம்தான் அவரது பிறந்தநாள். எனவே பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால் ஊடகங்களின் நெருக்குதலால் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை உடனே வெளியிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். எனவே 7-ந்தேதிகட்சி அறிவிப்பு இருக்காது என்றே கருதுகிறார்கள்.

    அரசியல் கட்சிக்கான அறிவிப்பு காலதாமதம் ஆனாலும் அரசியலுக்குள் வருவதற்கு முன்னோட்டமாகவே இந்த பிரச்சினையில் அவர் நேரடியாக களத்தில் இறங்கி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

    கழிவுகள் கலப்பதை பார்வையிட்டதோடு காட்டுப்பாக்கம் பகுதி பெண்கள், இளைஞர்களிடம் கருத்து கேட்டு இருக்கிறார்.

    தான் அரசியலுக்கு வருவதை, பிரச்சினைகளை அணுகும் விதத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவே இப்படி ஒரு திடீர் நடவடிக்கையை அவர் மேற்கொண்டதாக கூறுகின்றனர்.

    தான் களம் இறங்கி இருப்பது ஏற்படுத்திய தாக்கத்தை தனது நலம் விரும்பிகள் மூலம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்.

    வெறும் அரசியல் விமர்சனங்களை மட்டுமே செய்து எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தவர் முதல் நாள் முதல் ஆட்டம், முதல் பந்திலேயே சிக்சருக்கு விளாசி ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது போல் செய்து இருக்கிறார்.

    அரசியல் தளத்தில் இப்படி இருப்பேன் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து இருக்கிறார். சினிமா படங்களுக்கு முன்னோட்டம் விட்டு ஏற்படுத்தும் பரபரப்பை போல் அரசியலுக்கும் கமல் முன்னோட்டம் விட்டு எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறார்.

    Next Story
    ×