என் மலர்

    செய்திகள்

    நெல்லை மாவட்டம் முழுவதும் தீபாவளி பட்டாசு வெடித்ததில் 24 இடங்களில் தீ விபத்து
    X

    நெல்லை மாவட்டம் முழுவதும் தீபாவளி பட்டாசு வெடித்ததில் 24 இடங்களில் தீ விபத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 24 இடங்களில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த 24 இடங்களிலும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
    நெல்லை :

    நெல்லை மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறையினர் தீபாவளி அன்று வெடிவிபத்துக்களை தவிர்க்க தீவிர கண்காணிப்புடன் இருந்தனர். தீயணைப்பு வாகனங்களை நகர் புறங்களின் முக்கிய பகுதிகளில் தண்ணீருடன் நிறுத்தி தயார் நிலையில் இருந்தனர்.

    பட்டாசு வெடித்ததனால் ஏற்பட்ட தீ விபத்து பற்றி தகவல் வந்தவுடன் உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு சென்று பெரிய விபத்து ஏற்படாமல் தீயை அணைத்து வந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 24 இடங்களில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த 24 இடங்களிலும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    சங்கரன்கோவிலில் அருணாசலம் என்பவருக்கு சொந்தமான எலக்ட் ரானிக்கல் குடோனில் நேற்று பெரிய அளவில் தீ பிடித்து சேதம் ஏற்பட்டது. இங்கு சங்கரன்கோவில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று பக்கத்து கடைகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர்.

    இதுபோல நாங்குனேரி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சியில் ரேசன்கடை செட்டில் தீ பிடித்து சாக்கு மூட்டைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது.

    நெல்லை மாநகரில் மட்டும் 7 இடங்களில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

    பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளம் ரெயில்வேகேட் பகுதியில் பால்பாண்டி என்பவருக்கு சொந்தமான ஒர்க்ஷாப், பாளை மார்க்கெட் கோட்டூர் ரோட்டில் உள்ள மகேஷ் என்பவரது வீட்டு மாடியில் போடப்பட்ட செட் ஆகியவை எரிந்தது. இங்கு பாளை தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    சுத்தமல்லி பெரியார்நகர் விலக்கில் வெங்கடேசன் சலூன் கடையும் பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்தது.

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தில் மாநகர கிறிஸ்தவ சபையின் ஜெபகூடாரம் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இங்கும் பாளை, பேட்டை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    தீயணைப்புபடை வீரர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் இருந்ததால், அனைத்து தீ விபத்துக்களையும் உடனடி யாக அணைத்து விட்டனர். இதனால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படாமல் தப்பியது.
    Next Story
    ×