என் மலர்

    செய்திகள்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்காது: அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வே இல்லாதநிலை உடனடியாக உருவாக்கப்படும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மனிதநேய மக்கள்கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    மோடி தலைமையிலான மத்திய அரசு திடீரென்று கொண்டு வந்துள்ள நீட் தேர்வு முறையால் தமிழக மாணவ, மாணவிகளின் மருத்துவக் கல்லூரி கனவு பாழாகியுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குழந்தைகள் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தமிழக மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்திடவேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், மாணவர்களும் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டிய எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மோடி அரசின் காலில் விழுந்து கிடக்கிறது.

    தமிழக மக்களின் மீதும், மாணவ, மாணவிகளின் மீதும் அக்கறை என்பதே இல்லாமல் வெறும் பதவி சுகத்தை மட்டுமே அணுபவித்து வரும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசை விரட்டி அடித்திட வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழகத்திற்குள் நீட் தேர்வே வந்திருக்காது என்பது நிச்சயமாகும்.

    வரும் நாட்களில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் நீட் தேர்வே இல்லாதநிலை உடனடியாக உருவாக்கப்படும் என்பது நிச்சயமாகும். இதற்கு அனைத்துகட்சியினரும், மாணவர்களும், பெற்றோர்களும் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருந்திடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×