என் மலர்

    செய்திகள்

    சூளகிரி பகுதியில் கனமழை: சாலை மூழ்கியதால் மாணவ, மாணவிகள் அவதி
    X

    சூளகிரி பகுதியில் கனமழை: சாலை மூழ்கியதால் மாணவ, மாணவிகள் அவதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சூளகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் சாலை மூழ்கியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    சூளகிரி:

    சூளகிரி பக்கமுள்ள சக்கார்லு கிராமத்தின் அருகே உள்ள ஆற்றை கடந்துதான், சக்கார்லு, சின்ன பாப்பனபள்ளி, பெரிய பாப்பனபள்ளி, ராமச்சந்திரபுரம் ஆகிய கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், ஆற்றில் மழைநீர் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலை முழுவதும் மழைநீரால் மூழ்கியது. மேலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலையின் நடுவே மண்அரிப்பு ஏற்பட்டு பள்ளம் உண்டானது. இதன் காரணமாக கிராமத்திலிருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், நேற்று வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்கினர்.

     இதேபோல், சூளகிரி, பேரிகை, காருபளா மற்றும் அருகாமையில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வரும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் நேற்று பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். காலை, பள்ளிகளுக்கு செல்ல மாணவ, மாணவியரும், பணிகளுக்கு செல்வோரும் ஆயத்தமாகி சென்றபோது, ஆற்றில் நீர் பெருக்கெடுத்தோடியதால், ஆற்றை கடக்க முடியாமல் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு திரும்பினார்கள்.

    தற்போது, இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 5 கி.மீட்டர் தூரத்தை கடந்துதான், தங்கள் தேவைகளுக்காக சூளகிரி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கிராம பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதேபோல சூளகிரி அருகே காமன்தொட்டி பக்கமுள்ள ஆபரி கிராமத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சாலை, மழையின் காரணமாக சேறும், சகதியுமாக மோசமான நிலையில் உள்ளதால், மாணவ, மாணவியர் பெரிதும் அவதிப்பட்டனர்.
    Next Story
    ×