என் மலர்

    செய்திகள்

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கரூர் கலெக்டர் பேச்சு
    X

    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கரூர் கலெக்டர் பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் கரூர் கலெக்டர் கோவிந்தராஜ் பேசினார்.
    வேலாயுதம்பாளையம்:

    கோம்புபாளையம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் கவிதா, ஆர்.டி.ஓ. சரவண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி உதவி இயக்குனர் ராஜ்மோகன் வரவேற்றார்.

    கலெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு கிராம சபை கூட்டத்தை துவக்கி வைத்து பேசும்போது, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால்  குடிநீர் பிரச்சனை முடிவுக்கு வரும். ஆனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு உட்பட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  அதை தடுக்க அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதும் பொதுமக்களும் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும்.

    மழைநீர் தேங்க கூடிய தேவையற்ற பொருட்களை அகற்றுவதோடு குடிநீர் தொட்டிகளை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்ற கொள்ள வேண்டும். அதேபோல் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க வீடுகள் தோறும் கழிப்பறை அமைக்க வேண்டும். கோம்புபாளையம் ஊராட்சியில் ஒரு சில வீடுகளை தவிர அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாம் குழந்தைகளுக்கு சுத்தம், சுகாதாரம் மற்றும்  நல்ல பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை கற்று கொடுப்பதுடன் சிறந்த கல்வியையும் அளிப்பதின் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் நல்லகுடிமகனாக மாறி இந்தியாவை வளமாக்குவார்கள் என்றார். தொடர்ந்து கோம்பு பாளையம் ஊராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர். கரூர் பி.டி.ஓ. (கிராமஊராட்சி) அன்புசெல்வன் நன்றி கூறினார். இதில் பி.டி.ஓ. (வட்டார ஊராட்சி) பரமேஸ்வரன், மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் மூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் சுதமதி, வி.ஏ.ஓ.க்கள் முருகேசன், தனபால், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×