என் மலர்

    செய்திகள்

    ராஜீவ் கொலையாளிகள் ராபர்ட் பயாஸ்- ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது: தமிழக அரசு
    X

    ராஜீவ் கொலையாளிகள் ராபர்ட் பயாஸ்- ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது: தமிழக அரசு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் ராபர்ட் பயாஸ்- ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.

    அவர்கள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கிற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், மனுதாரர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றும் இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பதில் மனுவே இன்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    அப்போதைய உள்துறை முதன்மை செயலாளராக இருந்த ராஜகோபால் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-


    ஆயுள் தண்டனை கைதிகள் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது.

    அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மீதான கொலை குற்றம் மிகவும் தீவிரமானது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை அவர்கள் படுகொலை செய்துள்ளனர். அதுவும், பொதுத் தேர்தலையொட்டி இந்த கொலை சம்பவம் நடந்ததால், நாடே பல நாட்களுக்கு ஸ்தம்பித்து விட்டன.

    அதேநேரம், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று மனுதாரர்கள் கடந்த 2006-ம் ஆண்டு அரசுக்கு மனு கொடுத்தனர். இதன்படி, நன்னடத்தை ஆய்வு குழு கடந்த 2007-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில், மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட கலெக்டர், சிறை கண்காணிப்பாளர், நன்னடத்தை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அவர்கள் அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்தனர். அப்போது, சிறை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், இவர்கள் 2009-ம் ஆண்டு சிறைக்குள் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் விதமான செயலில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தில், மனம் திருந்தினார்கள் என்று நன்னடத்தை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. அதனால், அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதேபோல, மீண்டும் இவர்கள் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நன்னடத்தை குழு 2010-ம் ஆண்டு கூடியது. அப்போதும், இவர்களை விடுதலை செய்ய நன்னடத்தை குழு பரிந்துரை செய்யவில்லை.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினியை, ராஜீவ்காந்தி குடும்பத்தினர் மன்னித்து விட்டனர் என்றும் சிறையில் நளினியை சந்தித்து அந்த குடும்ப உறுப்பினர் பேசினார் என்றும் கூறுவதையெல்லாம், நன்னடத்தை குழுவின் ஆய்வுக்கு எடுக்க முடியாது.

    அதேபோல, இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்றும் விடுதலை செய்யக்கூடாது என்றும் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் எந்த ஒரு கடிதமும் அனுப்பவில்லை. அப்படி ஒரு கடிதம் நன்னடத்தை குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படவும் இல்லை.

    எனவே, மனுதாரர்கள் இருவரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×