என் மலர்

    செய்திகள்

    புதுவை, இந்தியாவோடு இணைந்த நாள் விழா நாளை கொண்டாட்டம்
    X

    புதுவை, இந்தியாவோடு இணைந்த நாள் விழா நாளை கொண்டாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவோடு புதுவை இணைந்த தினத்தை விழாவாக நாளை கொண்டாடப்படுகிறது.
    புதுச்சேரி:

    இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நேரத்தில் புதுவை பிரெஞ்சுக்காரர்களிடமும், கோவா பகுதி போர்ச்சுக்கீசியர்களிடமும் இருந்தது.

    இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்த போதிலும் புதுவை பகுதி அதன் பிறகும் 7 ஆண்டுகள் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் கீழேயே இருந்தது.

    1954-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதிதான் புதுவைக்கு பிரெஞ்சுக்காரர்கள் சுதந்திரம் அளித்து விட்டு வெளியேறினார்கள்.

    ஆனாலும் கூட புதுவை உடனடியாக இந்தியாவோடு இணையவில்லை. 8 ஆண்டுகள் தனி நாடு போல் செயல்பட்டது.

    இந்தியாவை ஆண்ட இங்கிலாந்துக்காரர்களின் சட்டதிட்டங்கள் வேறு மாதிரியும், புதுவையை ஆண்ட பிரெஞ்சுக்காரர்களின் சட்ட திட்டங்கள் வேறு மாதிரியும் இருந்தன.

    இதன் காரணமாகத்தான் புதுவையால் உடனடியாக இந்தியாவோடு இணைய முடியவில்லை. இந்திய பகுதி மற்றும் புதுவையின் சட்டதிட்டங்களை ஆராய்ந்து அதில் உள்ள வேறுபாடுகளை களைவதற்காக இரு பகுதிகளையும் சேர்ந்தவர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் கொடுத்த பரிந்துரைப்படி சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு அதன்பின் ஒப்பந்தம் ஏற்படுத்தி இந்தியாவோடு புதுவை இணைக்கப்பட்டது.

    இதன்படி 1962-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி புதுவை இந்தியாவோடு இணைந்தது. இதன் பிறகுதான் புதுவை மக்கள் தங்களை இந்தியர் என்று சொல்லிக்கொள்ள அரசியல் சட்ட ரீதியாக வழி கிடைத்தது.

    இந்தியாவோடு புதுவை இணைந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை இணைப்பு தின விழா நடைபெறுகிறது.

    பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது சம்பந்தமாக புதுவை கீழூரில் புதுவை பிரதிநிதிகளை கொண்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பெரும்பான்மை பிரதிநிதிகள் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் புதுவைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

    வாக்கெடுப்பு நடந்த கீழூரில் இதற்காக நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில்தான் நாளை புதுவை இணைப்பு தின விழா நடத்தப்படுகிறது. கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

    புதுவை இணைப்பு நாள் விழாவையொட்டி நாளை புதுவையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×