என் மலர்

    செய்திகள்

    டெல்லியில் அமைச்சர்கள் முகாம்: ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா?
    X

    டெல்லியில் அமைச்சர்கள் முகாம்: ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக அமைச்சர்கள் 2-வது நாளாக டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் பொதுவான தகுதித் தேர்வை (நீட்) மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இதனால் தமிழக கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதை தடுக்க தமிழக அரசு 85 சதவீத உள் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

    ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    தமிழக மாணவர்களின் மருத்துவ கனவையும் லட்சியத்தையும் நிறைவேற்றும் வகையில் இந்த பிரச்சினைக்கு இறுதி வடிவம் கொடுக்க தமிழக அமைச்சர்கள் 6 பேர் கடந்த வாரம் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்தனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    அமைச்சர்கள் 2-வது முறையாக டெல்லி சென்று மீண்டும் மத்திய மந்திரிகளை நேற்று சந்தித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் விஜயபாஸ்கர் சந்தித்து மீண்டும் அழுத்தம் கொடுத்தனர்.

    தமிழக அமைச்சர்கள் வைத்த கோரிக்கையினை சாதகமாக பரிசீலிப்பதாக ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். அமைச்சர்கள் டெல்லியில் தங்கி இன்று 2-வது நாளாகவும் சில மத்திய மந்திரிகளை சந்தித்து நீட் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க தீவிர முயற்சி மேற்கொணடு வருகின்றனர்.

    இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

    நீட் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரும், 6 அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் விலக்கு அளிக்கக்கூடிய சாதகமான சூழல் நிலவுகிறது. கடந்த வருடம் விலக்கு அளித்தது போல இந்த ஒரு வருடம் மட்டும் நீட்டில் இருந்து விலக்கு அளிக்க கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மத்திய அரசுடன் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சுமூக உறவின் மூலம் நீட் தேர்வு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
    Next Story
    ×