என் மலர்

    செய்திகள்

    பண்ருட்டி அருகே லாரி கவிழ்ந்தது: 5 பேர் படுகாயம்
    X

    பண்ருட்டி அருகே லாரி கவிழ்ந்தது: 5 பேர் படுகாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பண்ருட்டி அருகே லாரி நிலை தடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் கடலூர்- சித்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பண்ருட்டி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து முந்திரி கட்டைகள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை விருத்தாசலம் அருகே உள்ள பூண்டியார் குப்பத்தைச் சேர்ந்த ராஜசந்திரன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக சஞ்சய்காந்தி (28) என்பவர் இருந்தார்.

    இன்று அதிகாலை அந்த லாரி பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று எதிரே வந்தது.

    அப்போது திடீரென்று மினி லாரி மீது முந்திரி கட்டை ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் முந்திரிகட்டை ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜசந்திரன், கிளீனர் சஞ்சய்காந்தி, மினி லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த கொளஞ்சி (40) மற்றும் மினி லாரியில் வந்த அருள்அரசன், தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்தால் கடலூர்- சித்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×