என் மலர்

    செய்திகள்

    பா.ஜனதா ஏஜெண்டாக செயல்படும் கிரண்பேடியை மாற்ற வேண்டும்: ஐ.என்.டி.யூ.சி. கோரிக்கை
    X

    பா.ஜனதா ஏஜெண்டாக செயல்படும் கிரண்பேடியை மாற்ற வேண்டும்: ஐ.என்.டி.யூ.சி. கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாரதீய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படும் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி.யுடன் இணைக்கப்பட்ட தொழிற் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள், இணைக்கப்பட்ட தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ராகுல்காந்தி எம்.பி. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று விரைவில் கட்சிக்கும், நாட்டுக்கும் வழிகாட்ட வேண்டும்.

    ஜனாதிபதி தேர்தலில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் மீராகுமாரை தேர்வு செய்த சோனியா காந்திக்கும், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வது. மேலும் மீராகுமார் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து கொள்வது.

    புதுவை கவர்னராக கிரண்பேடி நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் அதிகார தோரணையிலும், விளம்பர மோகத்திலும் மூழ்கி உள்ளார்.

    புதுவை மக்களால் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. ஆனால், அதனை செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டு காங்கிரஸ் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக களங்கம் ஏற்படுத்தும் வகையில் சதி வேலையில் ஈடுபடும் பாரதீய ஜனதா கட்சியின் ஏஜெண்டு கவர்னர் கிரண்பேடியை வன்மையாக கண்டிப்பது, மேலும் அவரை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

    புதுவைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்வது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என புதுவை அரசை கேட்டுக் கொள்வது

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×