என் மலர்

    செய்திகள்

    ஒத்திவாக்கம் பெரிய ஏரியை தூர் வாரகோரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
    X

    ஒத்திவாக்கம் பெரிய ஏரியை தூர் வாரகோரி லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒத்திவாக்கம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியை தூர் வாரக்கோரி பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில், உள்ள ஒத்திவாக்கம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி பெரிய ஒத்திவாக்கம், சின்ன ஒத்திவாக்கம், இடையர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் ஏரி நிரம்பாமல் உள்ளது.

    மேலும் ஏரியிலிருந்து மதகு வழியாக தண்ணீர் வரமுடியாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஒத்திவாக்கத்தில் சமநிலையில் உள்ள பெரிய ஏரியில் தூர் வாருவதாக கூறி ஏரிக்கரையை பொதுப் பணித்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், 5 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 2 லாரிகளை சிறைபிடித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலரிந்ததும் கூடு வாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் பாலசுந்தரம், விஏஓ உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அங்கு வந்தனர். அப்போது அவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ஏரியை தூர் வாருவதாக கூறி ஏரிக்கரையை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் ஏரிக்கரையை பலப்படுத்தாமலும், சரிவர சீரமைக்காமலும் அலட்சியப்போக்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏரியை ஆழப்படுத்தவோ, தூர் வாரவோ இல்லை. இதில் ஏரிக்கரையின் பக்கவாட்டில் கற்களை பதிக்கவில்லை. தற்போது மழை பெய்தால் ஏரிக்கரையில் போடப்பட்டுள்ள மண் மீண்டும் சரிந்து விழும். மேலும் மழைநீர் கலங்கள் செல்லும் வழியையும் சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதில் ஏரி சமமாக உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் ஊருக்குள் புகுந்து வீணாக ஓடுகிறது.

    எனவே இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஏரியை பார்வையிட்டு தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கால்வாய் கூட்ரோட்டில் பொதுமக்கள் திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபடுவோம் என்றனர்.

    இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வருவாய்த் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×