என் மலர்

    செய்திகள்

    தீவிபத்து நடந்த ஜெம் ஆஸ்பத்திரி
    X
    தீவிபத்து நடந்த ஜெம் ஆஸ்பத்திரி

    கோவையில் ஜெம் ஆஸ்பத்திரியில் பயங்கர தீவிபத்து: நோயாளிகள் வெளியேற்றம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவையில் இன்று காலை ஜெம் ஆஸ்பத்திரியின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
    கோவை:

    கோவை ராமநாதபுரம் பகுதியில் ஜெம் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. 4 தளங்களை கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் குடல், கல்லீரல், கணையம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இங்கு அறுவை சிகிச்சை முடிந்த உள்நோயாளிகள் ஏராளமான பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினமும் 100-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்வார்கள். தினமும் ஏராளமான அறுவை சிகிச்சைகளும் நடைபெறும். இது முற்றிலும் குளிரூடப்பட்ட ஆஸ்பத்திரியாகும்.

    இன்றுகாலை 7.30 மணியளவில் ஆஸ்பத்திரியின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள யு.பி.எஸ்.சில் இருந்து வெளியேறிய தீப்பொறி மருத்துவ கழிவுகள் மீது பட்டு தீ மளமளவென எரிந்தது. மேலும் உயரமாக தீ எரிந்ததால் அது சென்டரலைஸ்ட்டு ஏ.சி. மீது பட்டு தீப்பிடித்து புகை வெளியேறியது.


    இதையடுத்து ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் ஆஸ்பத்திரி முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு இருப்பதால் புகை அனைத்து தளங்களிலும் குழாய் வழியாக வேகமாக பரவியது.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீவிபத்து நடந்த ஆஸ்பத்திரிக்கு 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் விரைந்து வந்தது.

    மேலும் 4 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் முச்சுதிணறலில் இருந்து தப்பிக்க உதவும் முககவசங்களை அணிந்து ஆஸ்பத்திரிக்குள்ளே நுழைந்தனர்.

    முதலில் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றினர். பின்னர் அவசர சிசிக்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளை மீட்டு தயாராக இருந்த ஆம்புலன்சுகளில் ஏற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஒருபுறம் ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட புகையை அகற்றும் பணியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நோயாளிகள் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காலை 9 மணிவரை 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளை மீட்டு வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


    இந்த தீவிபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் புகை மூட்டமாக இருப்பதால் யாராவது மூச்சுதிணறலில் சிக்கியுள்ளார்களா? என்று தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகிறார் கள்.

    இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியே ஒரே பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான ஆம்புலன்சுகள், தீயணைப்பு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் வந்ததால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகளவில் திரண்டது.
    Next Story
    ×