என் மலர்

    செய்திகள்

    பன்னீர்செல்வம் அணியுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது: நாஞ்சில் சம்பத்
    X

    பன்னீர்செல்வம் அணியுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது: நாஞ்சில் சம்பத்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பன்னீர்செல்வம் அணியுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது. பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டு விட்டது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
    அம்பை:

    டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அம்பையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க. பிளவுபடவில்லை. கட்சி பிளவுபட்டதை போல மாய தோற்ற‌த்தை உருவாக்கி உள்ளனர். தினகரனால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். எனவே அவர் நன்றியுடன் இருந்திருக்க வேண்டும்.

    சட்டசபையில் பன்னீர் செல்வமும், ஸ்டாலினும் ஒரே குரலில் பேசினர். பன்னீர்செல்வத்துடன் 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இன்னும் 10 பேர் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வர். இதுதான் திமுகவின் திட்டம். பா.ஜனதாவினர் 123 எம்.எல்.ஏக்கள் உள்ள எங்களையும் கூப்பிடுகின்றனர். 11 எம்.எல்.ஏக்கள் உள்ள பன்னீர்செல்வத்தையும் கூப்பிடுகின்றனர். பா.ஜனதா அடையாளம் தெரியாமல் அழிந்துவிடும்.


    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை. பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பதவி என்பது வியாபாரம் மாதிரி. நீதி கேட்டு போகிறேன் என்பதை இனி அவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும். இனி பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை கிடையாது. பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டு விட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வருகிறார் என்ற அறிவிப்பு தமிழகத்திற்கு புதிய ஆபத்து. இனம், மொழி, பண்பாடு, உரிமை இந்த தளத்தில் நின்று போராடுகின்ற லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு விடப்பட்டிருக்கிற அறைக்கூவல். தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆகவே தமிழர்கள் இந்த ஆபத்தை தவிர்த்து கொள்வதற்கு யோசிக்க வேண்டியது மிக முக்கியம்.

    கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும், அவை தலைவர் செங்கோட்டையனையும் அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று டில்லி சென்றுள்ள பன்னீர்செல்வம் பேட்டியளித்திருக்கிறார். அவர்களை நியமித்தது கட்சியின் பொது செயலாளர். ஒருவரை நீக்குவதற்கும், சேர்ப்பதற்குமான அதிகாரம் பொது செயலாளருக்கு மட்டுமே உண்டு. விபரம் தெரியாமல் பேசுகிறார் பன்னீர்செல்வம். நாடு தழுவிய அளவில் நாங்கள் மேற்கொண்டு இருக்கிற இந்த பயணம் தமிழக அரசியலில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
    Next Story
    ×