என் மலர்

    செய்திகள்

    சேகர்ரெட்டி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சேகர்ரெட்டி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட்டு உத்தரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பண பரிமாற்ற மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சேகர்ரெட்டி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர்ரெட்டி வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் கடந்த டிசம்பர் மாதம் சோதனை நடத்தினார்கள். அப்போது, ரூ.34 கோடிக்கு, அண்மையில் வெளியிடப்பட்ட புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள், ரூ.147 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள், 178 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, சேகர்ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அந்த வழக்கில் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் வந்து விட்டனர்.

    இதையடுத்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும், 178 கிலோ தங்கத்தையும் பதுக்கி வைத்திருந்ததாக சேகர்ரெட்டி உள்ளிட்டோர் மீது பண பரிமாற்ற மோசடி சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சேகர்ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசராவ், பிரேம்குமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். 
    Next Story
    ×