என் மலர்

    செய்திகள்

    பேச்சுவார்த்தைக்கு கே.பி.முனுசாமி தலைமையில் குழு: ஓ.பி.எஸ் அணி அறிவிப்பு
    X

    பேச்சுவார்த்தைக்கு கே.பி.முனுசாமி தலைமையில் குழு: ஓ.பி.எஸ் அணி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அதிமுகவின் இரு அணிகள் இணைவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. அணிகளை இணைப்பதற்கு நடந்த முயற்சியில் இரு அணிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கொடுத்த பேட்டிகளால் சர்ச்சை எழுந்ததால் பேச்சு வார்த்தை தொடங்கும் முன்பே முட்டுக்கட்டை விழுந்தது.

    இதனையடுத்து, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    அதன்பிற்கு அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்று பன்னீர்செல்வம் அணியின் கே.பி.முனுசாமி இன்று பிற்பகலில் தெரிவித்தார்.

    பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்குமாறு அதிமுக அம்மா அணியிடம் இருந்து முறையான அழைப்பு வந்ததாகவும், இரவுக்குள் தங்கள் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் ஓ.பி.எஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

    இதனையடுத்து, பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மைத்ரேயன், மாபா. பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து ஓ.பி.எஸ் அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட அணி அமைக்கப்பட்டுள்ளது.



    இதுதொடர்பாக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், மைத்ரேயன் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.



    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கே.பி.முனுசாமி தலைமையேற்று பேச்சுவார்த்தையை விரைவில் நடத்துவார். பேச்சுவார்த்தைக்கு முன்பாக நிபந்தனைகளை சொல்வது சரியாக இருக்காது. விரைவில் நல்லது நடக்கும்” என்று தெரிவித்தார்
    Next Story
    ×