என் மலர்

    செய்திகள்

    பாப்பாரப்பட்டி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்
    X

    பாப்பாரப்பட்டி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாப்பாரப்பட்டி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து வாழை, கரும்புகளை மிதித்து சேதப்படுத்தின.
    பாப்பாரப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி பாரதிபுரம் கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. நேற்று அதிகாலை பிக்கிலி வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் வெளியே வந்தன. இந்த யானைகள் வரட்டுப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா என்பவருடைய 1 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழைத்தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன.

    மேலும் அதேபகுதியை சேர்ந்த பச்சைக்கண்ணு என்பவருடைய கரும்பு தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. சகாதேவன், பச்சியப்பன் ஆகியோருக்கு சொந்தமான சோளப்பயிர்களை 3 யானைகளும் மிதித்தும் சேதப்படுத்தின. இதையறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தங்கள் கொளுத்தியும் யானைகளை விரட்டினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 யானைகளும் பிக்கிலி வனப்பகுதிக்கு சென்றன.

    யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, சோளப்பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தியதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனவர் முருகன், கிராமநிர்வாக அலுவலர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டனர்.

    அப்போது விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து ஒரு ஆண் யானை, பெண் யானை, ஒரு குட்டி என 3 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து வாழை, கரும்பு, சோளம் ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகள் நிலங்களில் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சேதமடைந்த பயிர்கள் குறித்து கணக்கெடுத்து இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×