என் மலர்

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்
    X

    குமரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    நாகர்கோவில்:

    ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சென்னை மெரீனா முதல் கன்னியாகுமரி வரை மாணவர்களும், இளைஞர்களும் திரண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வலுத்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கல்லூரி மாணவர்கள் சிலர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றது. நேற்று மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள், டாக்டர்கள், மீனவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டம், தர்ணா என பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன்பு நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், இளைஞர்களும் திரண்டு போராட்டம் நடத்தினர். நேற்று இரவு விடிய, விடிய போராட்டம் நீடித்தது. இன்று 5-வது நாளாக அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்போட்ட போதிலும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களிலும் இருந்தும் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் தமிழ் ஆர்வலர்களும், இளைஞர்களும் குடும்பத்துடன் பங்கேற்றனர். பெண்கள் பலர் தங்கள் கைக்குழந்தைகளுடன் வந்து பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும், உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    மாணவர்கள் தங்கள் கைகளில் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு படங்களை கையில் ஏந்தி நின்றனர். அவ்வப்போது அவர்கள் உணர்ச்சி பெருக்கெடுத்து கோ‌ஷம் எழுப்பினர்.

    மாணவர்கள், இளைஞர்கள் கூட்டத்தால் அண்ணா ஸ்டேடியம் ரோடு ஸ்தம்பித்தது. அந்த வழியாக சென்ற பஸ்கள், வாகனங்கள் ஊர்ந்து சென்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதேபோல மார்த்தாண்டம் காந்தி மைதானத்திலும் நேற்று மாணவர்கள் ஏராளமானோர் திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய, விடிய அவர்களது போராட்டம் நீடித்தது. இன்று காலையும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 6 படகுகளில் 60 மீனவர்கள் சென்று கடல் மறியல் போராட்டம் நடத்தினர். விவேகானந்தர் மண்டபத்துக்கு பயணிகள் செல்லும் வழியில் நின்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு பயணிகள் செல்லாத முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது. பின்னர் கடலோர பாதுகாப்பு படை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து படகுகளை கலைந்து போகச் செய்தனர்.

    Next Story
    ×