என் மலர்

    செய்திகள்

    குமரியில் இடி மின்னலுடன் மழை:  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    குமரியில் இடி மின்னலுடன் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குமரியில் மலையோர பகுதிகளிலும் அணை பகுதிகளிலும் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் பெய்யத் தொடங்கியது. அவ்வப்போது பெய்து வரும் மழையினால் பாசன குளங்கள், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயரத் தொடங்கியது.

    கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. கருமேகங்களும் திரண்டிருந்தன. கொட்டாரம், கன்னியாகுமரி, சாமித்தோப்பு, சுசீந்திரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மதியம் 1 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.

    மாலை 4 மணியளவில் இடிமின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இரவு வரை மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ரோடுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில், பூதப் பாண்டி, குளச்சல், குலசேகரம், அடையாமடை, இரணியல், குலசேகரம், கிரீப்பாறை, திட்டுவிளை, இறச்சகுளம் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொட்டாரத்தில் அதிகபட்சமாக 51 மி.மீ. மழை பதிவானது.

    திற்பரப்பு அருவி பகுதிகளிலும் மழை கொட்டியதால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு ரம்மியமான சூழலும் நிலவுகிறது. மலையோர பகுதிகளிலும் அணை பகுதிகளிலும் பெய்த மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 15.15 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 118 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 30.90 அடியாக இருந்தது. அணைக்கு 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 11.60 அடியாக இருந்தது. முக்கடல் அணை பகுதியில் 16 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கும்பப்பூ சாகுபடி செய்திருந்த நிலையில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர். தற்போது பெய்து வரும் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-11.4, பெருஞ்சாணி-7.8, சிற்றாறு-1-13.8, சிற்றாறு-2-10.2, மாம்பழத் துறையாறு-11, நாகர்கோவில்-22.2, பூதப் பாண்டி-12.2, சுருளோடு-14, கன்னிமார்-22.2, ஆரல் வாய்மொழி-12.4, பால மோர்-5.4, மயிலாடி-36.4, கொட்டாரம்-51, கன்னியாகுமரி-36, நிலப்பாறை-36, இரணியல்-9.2, ஆணைக் கிடங்கு-12, குளச்சல்-27.4, குருந்தன்கோடு-24, அடையாமடை-8, கோழிப்போர்விளை-8.2, திற்பரப்பு-14.8.

    Next Story
    ×