என் மலர்

    செய்திகள்

    சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி பா.ஜனதா கட்சியினரின் இரு சக்கர வாகனப் பேரணி
    X

    சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி பா.ஜனதா கட்சியினரின் இரு சக்கர வாகனப் பேரணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி, பா.ஜனதா கட்சியினரின் இருசக்கர வாகனப் பேரணியை மத்திய மந்திரி மேனகா காந்தி, சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    70-வது சுதந்திர தினத்தையொட்டி சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் பா.ஜனதா கட்சி சார்பில் தேசிய கொடியை ஏந்தியபடி தொடர் ஜோதி ஓட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் இருசக்கர வாகனப்பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு இல்லத்தில் மத்திய சென்னை பா.ஜனதா மாவட்ட தலைவர் கே.தனஞ்செயன் தலைமையில் நடந்த விழாவில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி, இரு சக்கர வாகனப்பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன்பாரதி மற்றும் ம.பொ.சிவஞானத்தின் மகள் மாதவி பாஸ்கர் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக அவரை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பார்த்தசாரதி சுவாமி கோவில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    விழாவில் பா.ஜனதா வர்த்தக அணி செயலாளர் ராஜா, மீனவ அணி தலைவர் சதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திட்டமிட்ட பாதையில் வாகன தொடர் ஜோதி ஓட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் திருவல்லிக்கேணி அருகில் உள்ள தெருக்கள் வழியாக சென்று ஓட்டம் நிறைவடைந்தது.

    முன்னதாக தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று காலை 11.30 மணி அளவில் அபயம் அமைப்பு சார்பில் தெருவோர குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தது. லதா ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். ஜஸ்வர்யா தனுஷ் வரவேற்றார். இந்தக் கருத்தரங்கில் மத்திய மந்திரி மேனகா காந்தி பேசியதாவது:-

    குழந்தைகள் நலனுக்காக மத்திய அரசு 1998-ம் ஆண்டு சைல்ட் லைன் என்ற அமைப்பை தொடங்கி அதற்காக 1098 என்ற தொலைபேசி சேவையையும் அறிமுகப்படுத்தியது. இந்த தொலைபேசி சேவையில் மாதத்துக்கு 14 லட்சம் அழைப்புகள் வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். ரெயில்களில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    குழந்தைகள் கடத்தல் அதிகம் நடக்கும் ரெயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கவும், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் பட்டியலை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆள் கடத்தல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்கான புதிய சட்டம் வரும் டிசம்பர் மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

    சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களைப் பற்றி ஆன்லைனில் புகார் தெரிவிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. தெருவோர குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இந்து என்.ராம், திலகவதி, ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ள மசோதா தொடர்பாக 21 தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசிடம் ஆலோசனை கேட்கும் கூட்டம் கிண்டியில் நேற்று பகல் 2 மணி அளவில் நடந்தது.

    இதில், மத்திய மந்திரி மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளர் லீனா நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்.
    Next Story
    ×