என் மலர்

    முன்னோட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஶ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா படத்தின் முன்னோட்டம்.
    நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘யசோதா’. இப்படத்தை ஶ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். ஹரி-ஹரீஷ் கூட்டணி இப்படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள். இப்படம் வரும் ஆகஸ்ட் 12 உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

    இப்படத்தில் சமந்தா உடன், வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    இசை : மணிசர்மா, வசனம்: புலகம் சின்னராயனா, Dr. செல்லா பாக்யலக்‌ஷ்மி, பாடல்கள்: ராமஜோகையா சாஸ்திரி, ஒளிப்பதிவு: M. சசிக்குமார், கலை: அசோக், சண்டைப்பயிற்சி: வெங்கட், எடிட்டிங்: மார்தந்த் K. வெங்கடேஷ், இயக்கம் : ஹரி - ஹரீஷ், தயாரிப்பு : சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீதர் தயாரிப்பில் அழகு கார்த்திக் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் ‘நோ எண்ட்ரி’ படத்தின் முன்னோட்டம்.
    ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நோ எண்ட்ரி’. இப்படத்தை அழகு கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை பரபர திரைக்கதையில் திரில் பயணமாக உருவாக்கி வருகிறார்கள். 

    காட்டுக்கு நடுவே கட்டப்பட்ட மூங்கில் வீட்டில் முரட்டு நாய்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட மனிதர்கள் நாய்களிடம் இருந்து தப்பிக்கும் சாகச காட்சிகள் படு அசத்தலாக படமாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியா உண்மையில் நாய் காதலர் என்பதால் படத்தில் எந்த இடத்திலும் பயம் இல்லாமல், மிக எளிதாக நாய்களுடன் இணைந்து நடித்துள்ளார். நாய்களுக்கு ஸ்பெஷல் டிரெய்னிங் 25 நாள்கள்  கொடுத்துள்ளார்கள்.

    ஆண்ட்ரியா

    நடிகை ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீதர் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அஜீஸ் இசையமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் காரி படத்தின் முன்னோட்டம்.
    கிராம பின்னணியில் பிரம்மாண்டமாக, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் ‘காரி’ என்கிற புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் சசிகுமார். கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளார்.

    இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார்.

    தற்போது கார்த்தி நடித்துவரும் சர்தார் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக, தங்களது 5வது படைப்பாக எஸ்.லஷ்மண் குமார் மிகுந்த பொருட்செலவில் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.  

    அறிமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றிய சிவ நந்தீஸ்வரன் இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி இணையும் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் “அதிரா” படத்தின் முதல்காட்டுத்துணுக்கை, ராஜமௌலி, என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
    கிரியேட்டிவ் மேதையாக வலம் வரும் படைப்பாளி பிரசாந்த் வர்மா நட்சத்திர நடிகர்களை வைத்து படம் எடுக்காமல், சூப்பர் கதாநாயகர்களைத் தானே உருவாக்கி வருகிறார். ஜாம்பி கான்செப்ட்டை முதல் முறையாக டோலிவுட்டில் அறிமுகப்படுத்திய பிறகு, பிரசாந்த் வர்மா இந்தியாவின் முதல் அசல் சூப்பர் ஹீரோ படமான ஹனு-மேன் படத்தை, நடிகர் தேசாசர்ஜா நடிப்பில் உருவாக்கி வருகிறார். 

    இந்நிலையில் மற்றொரு நாயகனை வைத்து இன்னொரு சூப்பர் ஹீரோ படத்தினையும் உருவாக்கவுள்ளார். பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் அதிரா என்ற படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக நாயகன் கல்யாண் தாசரி அறிமுகமாகிறார்.

    இந்தியப்புராணக் கதாபாத்திரங்களின் ஈர்பில், பிரசாந்த் வர்மா மார்வெல் மற்றும் டிசிபோன்ற சூப்பர் கதாநாயகர்களைப் போன்ற பிரபஞ்சத்தை, இங்கு இந்தியாவில் உருவாக்குகிறார். பிரசாந்த் வர்மாவுடைய சினிமா டிக்யுனிவர்ஸின் இந்தப் படம் வசனம் மற்றும் கதை சொல்லும் வகையில் தனித்துவமாக இருக்கும். அதிரா பிரசாந்த் வர்மாவின் மற்றுமொரு சூப்பர் ஹீரோ படம், இதில் கல்யாண் தலைப்பு பாத்திரத்தில் நடிக்கிறார்.

    அதிரா

    பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இளம் புலிஎன்டிஆர் மற்றும் மாபெரும் பவர்ஸ்டார் ராம் சரண் ஆகியோர் “அதிரா” படத்தின் காட்டுத்துணுக்கை வெளியிட்டனர்.

    பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கீழ் அதிக நிதி நிலையில் கே.நிரஞ்சனரெட்டி இப்படத்தைத் தயாரிக்கிறார், திருமதி தன்யா வழங்குகிறார். படத்தின் திரைக்கதையை ஸ்கிரிப்ட்ஸ்வில்லே செய்துள்ளனர்.

    இப்படத்திற்கு கௌரி ஹரி இசையமைக்க, தாசரதிசிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களின் அருமையான உழைப்பில் காட்சியமைப்பும் பின்னணி இசையும் பாராட்டத்தக்கவகையில் அமைந்துள்ளது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஊர்வசி, தினேஷ், மாறன் நடிக்கும் ஜெ. பேபி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
    பா.இரஞ்சித் தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக ஜெ. பேபி என்னும் திரைப்படம் வெளிவர உள்ளது.

    இப்படத்தை சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர்.

    படக்குழுவினர்

    நடிகர் தினேஷ் , மாறன், ஊர்வசி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது.

    விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாக இருக்கும் இப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அட்டு படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான 'லாக்' படத்தின் முன்னோட்டம்.
    ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ திரில்லராக உருவாகியுள்ள படம் 'லாக்'. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா. பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், RPG ராயல் பினோபென் குழு, சக்திவேல் பிக்சர்ஸ், ஆகிய நிறுவனங்கள் இணைந்து ' லாக்' திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார்கள்.

    இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள். சிலருக்கு அந்தக் கனவுகள் பலிக்கின்றன. சிலருக்குப் பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்குக் கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.

    இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
    இல்லாவிட்டால் அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுவே 'லாக் ' படத்தின் கரு.

    இப்படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மது நடிக்க, இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  

    இப்படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா ஏற்கெனவே 'அட்டு' என்ற படத்தை இயக்கி, அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர். ஒளிப்பதிவு - நந்தா ,இசை -விக்ரம் செல்வா, எடிட்டிங் - மகேந்திரன் கணேசன் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீ அண்ணாமலையார் முவீஸ் தயாரிப்பில் செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் பேட்டரி படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீ அண்ணாமலையார் முவீஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி அறிமுகமகிறார். மற்றும் யோக் ஜப்பி, எம். எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், அபிஷேக், ராஜ்குமார், ஜார்ஜ் மரியம், கிருஷ்ண குமார், ராம, பேபி மோனிகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

    சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் இணைத்து சொல்லப்பட்ட இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்யும்.

    கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று அதை பணம் சம்பாதிக்கும் வியாபார தளமாக்கி விட்டனர். சூது கவ்வும் தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் க்ரைம் த்ரில்லர் படமே பேட்டரி. பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டு போல, ஏன்? எதற்கு? எப்படி? என்கிற ஆர்வத்தை தூண்டும் படியாக இருக்கும்.

    பேட்டரி
    பேட்டரி படத்தில் செங்குட்டுவன் - அம்மு அபிராமி

    பாடல்கள் நெல்லை ஜெயந்தா - தமயந்தி, சண்டை பயிற்சி - ஹரி தினேஷ், நடனப் பயிற்சி - தினேஷ், படத்தொகுப்பு - ராஜேஷ்குமார், கலை சிவா யாதவ், திரைக்கதை - வசனம் ரவிவர்மா பச்சையப்பன், ஒளிப்பதிவு கே.ஜி. வெங்கடேஷ், இசை - சித்தார்த் விபின், கதை - இயக்கம் மணிபாரதி, இணைத் தயாரிப்பு எம்.செங்குட்டுவன், எம்.கோபிநாத், தயாரிப்பு சி. மாதையன். இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூசாண்டி வரான் படத்தின் முன்னோட்டம்.
    ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி "பூசாண்டி வரான்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    ஜே.கே.விக்கி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் ஜே.கே.விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். 

    முன்னோட்டம்

    வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பிண்ணணியோடு உருவாக்கப்படுள்ள இந்த திரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்று நம்புகிறது படக்குழு... வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் பூ சாண்டி வரான் படத்தை வெளியிடுகிறார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரிப்பில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தின் முன்னோட்டம்.
    மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 அரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.

    தமிழ் (2டி) (3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), இந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.

    முன்னோட்டம்

    படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார். ஜூனியர் என்டிஆர் கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மையக்கரு என்று இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார்.

    ராம் சரணின் காதலி சீதாவாக செல்வி ஆலியா பட் நடித்துள்ளார். இதை தவிர ஒளிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரியல் இமேஜ் பிலிம்ஸ் பேனரில் எஸ்.சரவணன் தயாரிப்பில், ஷார்வி எழுதி இயக்கியுள்ள டூ ஓவர் படத்தின் முன்னோட்டம்.
    மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ள படம் டூ ஓவர். ஷார்வி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ரியல் இமேஜ் பிலிம்ஸ் பேனரில் எஸ்.சரவணன் தயாரித்துள்ளார். பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபாகரன் இசையமைத்துள்ளார். 

    ஒரு நடுத்தர குடுபத்தின் தலைவனான நாயகன் சிவா, தான் பார்த்து வந்த வேலை இழக்கிறான். அவனது மனைவி உமா மற்றும் ஐந்து வயது மகள் மேகா இவர்கள் மூவருக்குமான குடும்ப உறவு, சிவா வேலை இழந்ததால் ஏற்படும் குடும்ப சூழல். இதனால் கணவன் மனைவி பிரிவு, சிவாவின் புதிய வேலை தேடல் அதில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள் என கதையோட்டம் நிகழ்கிறது. இதில் அவன் வெற்றி பெற்றானா..?, அவனது குடும்பம் அவனுடன் இணைந்ததா..? என்பதாக கதை நிறைவடைகிறது. 

    சிவகுமாருக்கு வாழ்க்கை ஒரு பெரிய போராட்டம். அவர் வேலையை இழந்தார், அவரது மனைவி அவரை விட்டுவிட்டார், அவர் தனது குடியிருப்பில் இருந்து வெளியேறினார், அவருக்கு வருமானம் இல்லை. இருந்தபோதிலும், அவர் தோல்வியை ஏற்க மறுத்து, தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருக்கிறார். விஷயங்கள் எவ்வளவு இருண்டதாகத் தோன்றினாலும், உங்கள் வாழ்க்கை இலக்குகள் உட்பட, உங்கள் இலக்குகளை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே கதையின் தார்மீகமாகும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஶ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் “தசரா” படத்தின் முன்னோட்டம்.
    நடிகர் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் ஶ்ரீகாந்த ஒடெலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘தசரா’ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

    ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். தேசிய விருது வென்ற நாயகி கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித்துணுக்கு சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் நடிகர் நானி லுங்கியுடன் கரடுமுரடான தோற்றத்தில் தோன்றியுள்ளார். அவரது இந்த தோற்றம் பெரும் ஆவலை தூண்டுவதாக அமைந்துள்ளது.

    நானி

    சந்தோஷ் நாராயணனின் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டாணாக்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
    டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் டாணாக்காரன் அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும்.

    அதே போல, நடிகர் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு மைல்கல்லாக இருக்கும். திரைப்படத்தின் ஒவ்வொரு நடிகர், நடிகையும் தங்களது கதாபாத்திரங்களுக்காக முழு அர்ப்பணிப்போடு கடின உழைப்பைத் தந்துள்ளனர்.

    படத்தின் போஸ்டர்களும் டீசரும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் டிரைலரும், இசையும் விரைவில் வெளியாகவுள்ளது.

    முன்னோட்டம்

    மாயா, மான்ஸ்டர், மாநகரம் உள்ளிட்ட தனிச்சிறப்பு கொண்ட படைப்புகளை வழங்கிய பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த வருடம் வெளியிடும் முதல் திரைப்படம் இது. எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். 

    முன்னதாக ஜெய் பீம் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான பாராட்டுகளைப் பெற்றிருந்த தமிழ், டாணாக்காரன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 

    இயக்குனர் வெற்றிமாறனிடம் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்திருக்கும் தமிழ், இதற்கு முன் தமிழக காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    என்றும் நினைவில் நிற்கும் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அஞ்சலி நாயர் நாயகியாகவும், லால், எம் எஸ் பாஸ்கர், லிவிங்க்ஸ்டன் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

    ஏப்ரல் 2022ல் டாணாக்காரன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
    ×