என் மலர்

    சினிமா

    வன்முறைப்பகுதி
    X

    வன்முறைப்பகுதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோபக்கார இளைஞர்களின் கதையை பின்னணியாக கொண்டு கோபத்தின் தீமையை சொல்லும் ‘வன்முறைப்பகுதி’ படத்தின் முன்னோட்டம்.
    மதுரை ஸ்ரீமீனாட்சி கிரியே‌ஷன்ஸ், ஆரத்ரா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வன்முறைப்பகுதி’.

    3 கோபக்கார இளைஞர்களின் கதையை பின்னணியாக கொண்ட இந்த படத்தில் கதாநாயகனாக மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் மனோகரன், ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். கதா நாயகியாக ராபியா ஜாபர் என்ற கிராமத்து பெண் நடிக்கிறார். இவர்களுடன் திண்டுக்கல் தனம், உசிலைப் பாண்டியம்மாள் அம்மா வேடத்திலும் மாரி, முஜிபன் வில்லன்களாகவும் நடித்திருக்கிறார்கள். காமெடி வேடத்தில் சிவராமன் நடித்திருக்கிறார். தாய்மாமன் வேடத்தில் எம்.எஸ்.பி.ராஜேந்திரன் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - விஜய் வெற்றீஸ்வரன், மகேஷ், இசை - கவிகண்ணன், புனிதன், எடிட்டிங் - கே.ஆனந்தலிங்ககுமார், தயாரிப்பு - தா.நாகா, ஏ.ஞானோதயம், எழுத்து, இயக்கம் - தா.நாகா.

    அன்பின் வலிமையையும், கோபத்தின் தீமையையும் விளக்கும் வகையில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தை மதுரை, தேனி, திண்டுக்கல், ஆண்டிப்பட்டி போன்ற கிராமப் பகுதிகளுக்கு சென்று அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் பலரை கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்தோம். அவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தந்த பகுதிகளிலேயே 80 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தி முடித்தோம். தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது” என்றார்.

    Next Story
    ×