என் மலர்

    சினிமா

    ரசிகர்களை மிரள வைத்த மெர்சல் சாதனைகள் - முழு விபரம்
    X

    ரசிகர்களை மிரள வைத்த மெர்சல் சாதனைகள் - முழு விபரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனாண்டாள் பிலிஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படம் செய்த சாதனைகளின் முழு தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. #Mersal
    விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே,சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் அறிவித்த நாளில் இருந்தே பல சாதனை செய்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

    பலரும் தெரியாத சாதனைகள் அடங்கிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்டது மெர்சல் டீசர். இந்த  டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் பார்வையாளர்களை தொட்டது.

    தென்னிந்திய அளவில் அனைவராலும் யூடியூப்பில் பார்க்கப்பட்ட வீடியோஸ் மற்றும் அதிக லைக்ஸ் பெற்ற வீடியோக்களில் மெர்சல் முதல் இடம்.



    *குறுகிய நேரத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் பாடல்
    *குறுகிய நேரத்தில் அதிக அளவில் லைக்ஸ் செய்யப்பட்ட லிரிக்ஸ் பாடல்
    *குறுகிய நேரத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீசர்
    *குறுகிய நேரத்தில் அதிக அளவில் லைக்ஸ் செய்யப்பட்ட வீடியோ பாடல்
    *குறுகிய நேரத்தில் 20 மில்லியன் நேயர்களால் பார்க்கப்பட்ட வீடியோ பாடல்
    *அதிக அளவில் லைக்ஸ் செய்யப்பட்ட ப்ரோமோ பாடல்

    கேரளா பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்களில் மெர்சல் படமானது 21.9 கோடி வசூல் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
     
    தமிழ் நடிகர்களில் யூடியூப்பில் 25 வீடியோஸ் 100K லைக்ஸ் பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே. இதில் மெர்சல் திரைப்படத்தின் 16 வீடியோ 100K லைக்ஸ் பெற்றுள்ளது.



    மெர்சல் தமிழ் மொழி வீடியோ பாடல்கள் மற்றும் தெலுங்கில் வெளிவந்த அதிரிந்தி வீடியோ பாடல்கள் இரண்டும் சேர்ந்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. குறுகிய நேரத்தில் யூடியூப்பில் பார்க்கப்பட்ட 10 மில்லியன் வீடியோ பாடல்கள் லிஸ்டில் ஆளப்போறன் தமிழன் பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

    உலக அளவில் குறுகிய நேரத்தில் 150K லைக்ஸ் பெற்ற டீசரில் மெர்சல் படத்தின் டீசர் முதல் இடத்தில் உள்ளது மற்றும் ஆளப்போறன் தமிழன் ஆடியோ டீசர் தென்னிந்திய அளவில் 150K லைக்ஸ் பெற்று முதல் இடம் வகிக்கிறது. ஆளப்போறன் தமிழன் லிரிக் வீடியோ பாடல் மற்றும் பட பாடல் வீடியோ குறுகிய நேரத்தில் 150K லைக்ஸ் பெற்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    தென்னிந்திய சினிமாவில் குறுகிய நேரத்தில் 50K லைக்ஸ் பெற்ற பட டீசர்களில் மெர்சல் டீசர் 5 நிமிடத்தில் 50K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

    மெர்சல் படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்து 400K லைக்ஸ் பெற்றுள்ளது, மொத்தம் 2.34 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.

    2017 ஆண்டு SAAVN -ல் அதிக நபர்களால் விரும்பி கேட்ட தமிழ் ஆல்பங்களில் தென்னிந்திய அளவில் மெர்சல் முதல் இடத்தில் உள்ளது.



    தனியார் தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களை விட மெர்சல் மூன்று மடங்காக 6473000 BARC யை பெற்றுள்ளது.

    இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23 வது ரேங்க்யை பெற்றுள்ளது. தெறி திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US) $7.2 மில்லியன் பெற்று 50 வது ரேங்க்கில் இருந்தது. இதனை விஜய்யின் மெர்சல் படம் முறியடித்து (US) $ 11.89 பெற்று 23வது இடத்தில் உள்ளது.

    தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் மெர்சல் WTP -8.5 POINTS பெற்று முதல் இடத்தில் உள்ளது. மெர்சல் படத்திற்கு நேஷ்னல் பிலிம் அவார்ட்ஸ் யுனைடட் கிங்டம்-ல் இருந்து  சிறந்த நடிகர் விஜய், மற்றும் சிறந்த படம் மெர்சல் என இரு விருதுகள் வழங்கப்பட்டது.

    தமிழ் (USA ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் டாப்பில் உள்ளது. ரேடியோவில் டாப் 100 பாடல்களில் ஆளப்போறன் தமிழன் பாடல் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் டிரெண்ட்டாகி 2017 ஹாஸ்டேக்கில் மெர்சல் tag மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

    பிரான்சில் மெர்சல் திரைப்படம் 32471 ENTRIES பெற்று மற்ற தமிழ் படங்களை விட முதல் இடத்தில் உள்ளது.

    இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆன ஹாஸ்டேக்கில் #MERSAL டேக் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

    மேலும் முதல் தமிழ் திரைப்படம் டுவிட்டர் இல் எமோஞ்சி (EMOJI) யை அறிமுகப்படுத்திய பெருமை மெர்சல் திரைப்படத்தினை சேரும்.

    மேலும் சமீபத்தில் அண்ணா யூனிவர்சிட்டியின் 10 விருதுகளை மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

    இவ்வாறு பல சாதனைகளை படைத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
    Next Story
    ×