என் மலர்

    சினிமா

    கடைக்குட்டி சிங்கம் தலைப்பு ஏன் தெரியுமா?
    X

    கடைக்குட்டி சிங்கம் தலைப்பு ஏன் தெரியுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி வரும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடிகர் சத்யராஜ் கார்த்திக்கு அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடித்திருக்கிறார். #KadaikuttySingam #Karthi
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    கார்த்தி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர் மற்றும் அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் கார்த்தியின் அப்பாவாக நடிக்கிறார். படம் குறித்து பிரபல தனியார் நாளிதழ் ஒன்றுக்கு இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி அளித்த போது, முதலில் 60 வயதுடையவராக நடிக்க சத்யராஜ் யோசித்ததாகவும், கதையின் முக்கியத்துவம் கருதி ஒப்புக்கொண்டதாக கூறினார். 

    கார்த்தி இந்த படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 5 சகோதரிகளுடன் கடைசி ஆணாக கார்த்தி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 



    முழுக்க முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்படும் இந்த படத்தில் கண்ணுக்கினியாள் என்ற கதாபாத்திரத்தில் சாயிஷா நடிக்கிறார். கிராமத்து பெண்ணாக கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி அவர் கச்சிதமாக பொருந்தியிருப்பதாகவும், பாடல் காட்சிகளில் அசத்தியிருப்பதாகவும் பாண்டிராஜ் கூறியிருக்கிறார். 

    சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். #KadaikuttySingam #Karthi

    Next Story
    ×