என் மலர்

    சினிமா

    நெருக்கடியில் தமிழ் திரைப்பட உலகம்
    X

    நெருக்கடியில் தமிழ் திரைப்பட உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மார்ச் 1ம் தேதி முதல் தமிழ்த் திரையுலகத்தில் ஸ்டிரைக் நடைபெற இருப்பதால் பல திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
    தமிழ் பட உலகுக்கு இரண்டு வருடங்களாக போதாத காலம் தொடர்கிறது. சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தனர். பின்னர் எதிர்ப்பு காரணமாக ரூ.100-க்கும் அதிகமான விலை உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதம் என்றும் ரூ.100-க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்றும் மாற்றினர்.

    அதன் பிறகு அரசின் 30 சதவீத கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து 4 நாட்கள் தியேட்டர்களை மூடினர். பின்னர் அந்த வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. பட அதிபர்களுக்கும் பெப்சிக்கும் மோதல் ஏற்பட்டு சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் 13 நாட்கள் படப்பிடிப்புகள் முடங்கி இருந்தன.

    டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டு தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளது. திருட்டு வி.சி.டி.யும் சினிமாவை வதைக்கிறது. புது படங்களை தியேட்டர்களில் திரையிடும் நாளிலேயே இணையதளங்களில் வெளியிடும் நவீன தொழில் நுட்ப திருட்டுகளும் பெருகி உள்ளன. தற்போது மார்ச் 1-ந் தேதி முதல் கியூப் கட்டணத்தை குறைக்காத டிஜிட்டல் சேவை வழங்கும் அமைப்பை கண்டித்து புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி ‘ஸ்டிரைக்’ அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் பட உலகினர் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. டிஜிட்டல் சேவைகளை வழங்கும் அமைப்புகள் பட அதிபர்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா? என்று தெரியவில்லை. காலவரையற்ற வேலை நிறுத்தம் என்பதால் எத்தனை நாள் இந்த போராட்டம் நீடிக்கும்? என்றும் குழப்பம் உள்ளது.

    இதனால் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்த பல புது படங்களின் தயாரிப்பாளர்கள் தவிப்பில் உள்ளனர். விஷால் நடித்த இரும்புத்திரை, டைரக்டர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ராந்த், மிஷ்கின் இணைந்து நடித்துள்ள சுட்டுப்பிடிக்க உத்தரவு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கரு, விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி உள்ளிட்ட பல படங்கள் அடுத்த மாதம் திரைக்கு வர இருந்தன.

    இந்த படங்களை தள்ளி வைக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எடுத்த படங்களை திரைக்கு கொண்டு வர முடியாமல் சிறு பட தயாரிப்பாளர்கள் தவிக்கிறார்கள். 500-க்கும் மேற்பட்ட படங்கள் பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. இந்த சிக்கல்களுக்கு மத்தியில் இன்னொரு ஸ்டிரைக்குக்கு பட உலகம் தயாராகி வருகிறது. 
    Next Story
    ×