என் மலர்

    சினிமா

    வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்? பாரதிராஜா, சீமான் கண்டனம்
    X

    வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன்? பாரதிராஜா, சீமான் கண்டனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுக்காதது ஏன் என இயக்குநர் பாரதிராஜா, சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    வேலுபிரபாகரன் இயக்கத்தில் தயாராகும் படம் ‘கடவுள்-2’ இதில் பாரதிராஜா, சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது.

    ஆண்டாள் குறித்து வைரமுத்து என்ன சொல்லி விட்டார். ஆண்டாளைப் பற்றி ஒரு ஆய்வில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி இருக்கிறார். அவ்வளவுதான். அது அவருடைய சொந்த கருத்து கூட அல்ல. என்றாலும் அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டார்.

    அப்படி இருந்தாலும் அதை விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறார்களே ஏன்? அவருக்கு எதிராக கண்டனங்கள், போராட்டங்கள் எழுவது ஏன்?

    வைரமுத்துவை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் கொல்லைப் புறமாக நுழைய நினைத்தால் அது முடியாது. அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் தாத்தா விதைகளை கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். உங்களைப் பற்றியும் எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்.



    அதற்குள் புதர்கள் வளர்ந்துவிட்டன. பாம்புகள் குடிபுகுந்துவிட்டன. அவற்றை அகற்ற எங்களுக்கு தெரியும். விதைப்பதற்கு விதையும் பத்திரமாக இருக்கிறது.

    வைரமுத்து வெறும் திரைப்பட பாடல் ஆசிரியர் மட்டுமல்ல. இந்த மண்ணின் அடையாளம். தமிழ் மண்னோடு கலந்தவர். வைரமுத்து தனிமனிதன் அல்ல. வைரமுத்துவை கறை படுத்துவது வைகையை கறைபடுத்துவது போன்றது.

    இலக்கியத்துக்கும் தமிழுக்கும் அவர் ஆற்றிய தொண்டு சாதாரண மானது அல்ல. அவரை அடக்குவது எங்கள் இனத்தை தாக்குவதற்கு சமம். மானம், ரோ‌ஷம் இன்னும் எங்களை விட்டுப்போகவில்லை.

    முருகன் எங்கள் முப்பாட்டன். வேல் எங்கள் ஆயுதம். அதை மீண்டும் ஏந்த வைத்துவிடாதீர்கள். எச்.ராஜா, வைரமுத்துவை பார்த்து இழிவாக விமர்சித்துள்ளார். நான் எச்.ராஜாவை அதுபோல் சொல்லமாட்டேன். அது நாகரீகமாகாது.

    நாக்கை அறுக்க ரூ. 10 கோடி என அறிவிக்கும் ஒருவர் அமைச்சராக இருந்தால் நாடு எப்படி உறுப்படும்? இன்னொருவர் தலையை வெட்டுவேன் என்றால் கொலை வெறியை தூண்டுகிறவர்களை ஜெயிலில் போட வேண்டாமா?



    வைரமுத்துவை தகாத வார்த்தைகளால் பேசிய எச்.ராஜா வாயை கொப்பளித்துவிட்டு, வைரமுத்து வீட்டின் முன்பு நின்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

    நான் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு இங்கே பேசுவதாக எண்ண வேண்டாம். மறுபடியும் தவறாக வைரமுத்து மீது எங்கேயாவது வசை பாடியோ அல்லது வைதோ பார்க்க வேண்டாம். மதம் என்பது எங்களுக்கு எப்போதும் கிடையாது.

    ஒருவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வைத்து, ரசிகர்களை முட்டாள்களாக வளர்த்து இருக்கிறார். அவருடைய அறிவை மழுங்கடித்துவிட்டு இப்போது நாட்டை காப்பாற்ற புறப்பட்டு இருக்கிறார்.

    ஜெயலலிதா இல்லை என்ற தைரியம். சிகிச்சைக்காக கலைஞர் ஓய்வில் இருக்கிறார் என்ற துணிச்சலில் இப்படி செய்து கொண்டு இருக்கிறார். அரசியல் என்பது வேறு. இலக்கியம் என்பது வேறு. வைரமுத்து அவரது எழுத்து போல கம்பீரமானவர்.

    இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

    வைரமுத்து சொல்லாத வி‌ஷயத்தை சொல்லியதாக கூறி பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் வாய்க்குவந்ததை எல்லாம் பேசுகிறார். நீங்கள் என்ன சொன்னாலும் இங்கு கால் ஊன்ற முடியாது.



    எங்கள் உடலில் படர் தாமரைதான் படர்கிறது. தாமரை ஒருபோதும் இங்கு மலராது. நீங்கள் நோட்டோவுக்கு கீழ் இருப்பதால் தான் பேட்டா ரஜினிகாந்தை அழைத்துக் கொண்டு வருகிறீர்கள்.

    ரஜினி ஆன்மீக அரசியல் பற்றி பேசுகிறார். அப்படியென்றால் கட்சி செயற்குழு, பொதுக்குழு கோயிலில் நடக்குமா? நான் ஒருதடவை சொன்னால் நூறு தடவை சொன்னமாதிரி என்று சினிமாவின் பஞ்ச் டையலாக் பேசலாம்.

    ஆனால் இங்கு ஒவ்வொன்றையும் நூறு தடவை சொல்ல வேண்டும். இதை ரஜினி புரிந்துகொள்ள வேண்டும். அவர் எந்த பக்கம் நின்றாலும் அதற்கு எதிர் பக்கத்தில்தான் நான் நிற்பேன். தமிழ் மக்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள்? அவர்களை ஆள்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    இவ்வாறு சீமான் பேசினார்.

    நிகழ்ச்சியில் இயக்குனர் வேலுபிரபாகரன், பாடல் ஆசிரியர் சினேகன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×