என் மலர்

    சினிமா

    மோகன் லால் மகனை வாழ்த்திய மம்முட்டி
    X

    மோகன் லால் மகனை வாழ்த்திய மம்முட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மலையாள சினிமாவில் அறிமுகமாகும் மோகன்லால் மகனுக்கு நடிகர் மம்முட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    மலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் மோகன்லால், மம்முட்டி. இவர்கள் இருவரும் பல்வேறு மலையாள படங்களில் இணைந்தும் நடித்துள்ளனர்.

    சினிமாவில் இவர்கள் இடையே போட்டி இருந்தாலும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே பழகி வருகிறார்கள்.

    மம்முட்டியின் மகன் துல்கர்சல்மான் ஏற்கனவே மலையாள படவுலகில் அறிமுகமாகி இளம் நடிகர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில் தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் ‘ஆதி’ என்ற மலையாள சினிமா மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

    இதை தொடர்ந்து மோகன்லால் தனது மகன் பிரணவ் மற்றும் குடும்பத்தினருடன் கொச்சியில் உள்ள மம்முட்டியின் வீட்டிற்கு சென்றார். அப்போது மம்முட்டியின் காலில் விழுந்து பிரணவ் ஆசி பெற்றார்.



    இதன்பிறகு மோகன்லால் குடும்பத்தினருக்கு மம்முட்டி விருந்து அளித்தார். மோகன்லால் மற்றும் அவரது மகனுடன் தான் இருக்கும் போட்டோவை மம்முட்டி தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

    அதில், பிரணவ் நல்லவர். சிறு வயதில் இருந்து எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு வாழ்த்துக்கள் என்று மம்முட்டி குறிப்பிட்டுள்ளார்.

    மம்முட்டியின் இந்த வாழ்த்துக்கு சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

    Next Story
    ×