என் மலர்

    சினிமா

    விஜய்யின் 63வது படத்தை இயக்குவது இவரா?
    X

    விஜய்யின் 63வது படத்தை இயக்குவது இவரா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மெர்சல் படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் விஜய், அடுத்ததாக சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Vijay63
    ‘மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏற்கனவே பரதன் இயக்கிய பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்தில், யோகி பாபு முன்னணி காமெடியனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

    கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத்தும், கலை பணிகளை சந்தானமும் கவனிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் 62 படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 



    படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், விஜய்யின் 63வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

    விஜய்யின் 63வது படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×