என் மலர்

    சினிமா

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா
    X

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆந்திராவில் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா, தன்னை பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

    நடிகர் சூர்யா-கீர்த்தி சுரேஷ் நடித்த ‘‘தானா சேர்ந்த கூட்டம்’’ படம் தெலுங்கில் ‘‘கேங்’’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.


    1987-ம் ஆண்டு மும்பை ஒபரா ஹவுஸ் நகைக்கடையில் ஒரு கும்பல் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து சோதனையிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.


    கடந்த 12-ந்தேதி ‘கேங்’ படம் ஆந்திரா முழுவதும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நடிகர் சூர்யா ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து தியேட்டர்களில் நடைபெறும் கேங் பட விழாவில் கலந்து கொண்டு வருகிறார்.


    ஐதராபாத்தில் நடிகர் சூர்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு படையெடுப்பது குறித்து சரமாரி கேள்விகள் கேட்டனர். நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? அரசியலில் ஈடுபடும் நடிகர்களை ஆதரிப்பீர்களா? என்றும் கேட்டனர்.


    அதற்கு சூர்யா பதில் அளிக்கையில், ‘‘எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் கிடையாது. நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறப்படுவது தவறான தகவல். அது வெறும் வதந்திதான். அதே சமயம் அரசியலில் ஈடுபடும் எந்த நடிகரையும் ஆதரிக்கவில்லை. எதிர் காலத்திலும் யாரையும் ஆதரிக்க மாட்டேன்’’ என்றார்.


    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பற்றி கேட்டதற்கு ஆந்திராவில் ஊழலை ஒழிக்கும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். என்று பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×