என் மலர்

    சினிமா

    ஆண்டாள் பற்றிய விமர்சனம் - புண்படுத்துவது என் நோக்கமன்று, வைரமுத்து விளக்கம்
    X

    ஆண்டாள் பற்றிய விமர்சனம் - புண்படுத்துவது என் நோக்கமன்று, வைரமுத்து விளக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆண்டாள் பற்றி தவறாக பேசிய வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், புண்படுத்துவது என் நோக்கமன்று, என்று வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.
    கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. 

    தினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக இருந்ததாம். ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்குக்கு வந்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

    இந்நிலையில், ஆண்டாள் குறித்த வைரமுத்து தெரிவித்த எதிர்மறையான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக-வின் எச்.ராஜா, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். 

    எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

    Next Story
    ×