என் மலர்

    சினிமா

    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
    X

    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் `தளபதி 62' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Vijay #Vijay62 #Thalapathy62
    `மெர்சல்' படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

    சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்திற்கு பிறகு தளபதி 62-வது படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர கலை பணிகளை சந்தானம் கவனிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



    படத்தின் நாயகி, வில்லன் மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். 

    விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. 

    படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. #Vijay #Vijay62 #Thalapathy62
    Next Story
    ×