என் மலர்

    சினிமா

    ரஜினி அதிரடி அறிவிப்பால் கமல் அரசியல் பிரவேசம் தாமதம்
    X

    ரஜினி அதிரடி அறிவிப்பால் கமல் அரசியல் பிரவேசம் தாமதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததால், கமலின் அரசியல் பிரவேசம் தாமதமாகி இருக்கிறது என்று அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Rajinikanthpoliticalentry #RajiniForTamilNadu #Rajnikanth
    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் 21 ஆண்டுகளாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ் முடிவுக்கு வந்தது.

    அவர் தற்போதைய அரசியலில் இருந்து வித்தியாசமாக ஆன்மீக அரசியல் என்ற புதிய பாதையை தேர்வு செய்துள்ளார். இதுவரை கட்சி தொடங்கியவர்கள் உடனே கட்சிக்கு பெயர் சூட்டி, கொடி சின்னத்தை மேடையிலேயே அறிவித்து தொண்டர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால் ரஜினி அரசியல் பிரவேசம் என்ற வகையில் நிறுத்திக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிமேல்தான் மேற்கொள்ள இருக்கிறார்.

    ரஜினி போல் நடிகர் கமல்ஹாசனும் அரசியல் பிரவேசத்துக்கு தயாராகி வந்தார். அரசை விமர்சித்து டுவிட்டர்களில் கருத்து தெரிவித்து வந்தார். அவருக்கு அமைச்சர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். இதனால் அரசியலில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

    ஆனால் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினியும், கமலும் ஒன்றாக கலந்து கொண்ட போது ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அறிவுரை கூறுவதுபோல் பேசினார். “சிறந்த நடிப்பால் உயர்ந்து நிறைய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்த சிவாஜியால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை” என்று பேசி கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை எச்சரித்தார்.

    இதனால் கமல்ஹாசன் தனது அரசியல் ‘டுவிட்’களை படிப்படியாக குறைத்துக் கொண்டார். கடைசியாக ‘விஸ்வரூபம்-2’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அரசியல் டுவிட்களை அடியோடு நிறுத்திக் கொண்டார்.

    கமலை எச்சரித்ததால் ரஜினியும் நேரடி அரசியலுக்கு வரமாட்டார் என்றே அரசியல் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் கமலை எச்சரித்து விட்டு திடீர் என்று ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதை சற்றும் எதிர்பார்க்காத கமல்ஹாசன், ரஜினிக்கு டுவிட்டரில் வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ளார். ரஜினியின் அறிவிப்பு கமல்ஹாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது:-

    ரஜினியின் அரசியல் பிரவேசம் நிச்சயம் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தையும், அரசியல் கணக்குகளையும் பாதிக்கும். கமல்ஹாசன் முன்கூட்டியே அரசியல் அறிவிப்பை வெளியிட்டு அதன்பிறகு ரஜினி அறிவிப்பை வெளியிட்டு இருந்தால் அது கமல்ஹாசனின் வாக்குகளை பாதித்து விடும். அது இருவருக்கும் இடையே தேர்தல் மோதலாகி விடும்.

    அடையாள அரசியல் வரும்போது ரஜினிகாந்த் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொண்டு அவருடன் இணைந்து பணியாற்றுவது கடினம்.

    அதேசமயம் ரஜினி சினிமாவில் அதிரடி ஹீரோ என்ற அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். கமல்ஹாசன் சூப்பர் நடிகர். ஆனால் அவருக்கு குறைந்த சதவீதம் வாக்குகள்தான் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பு எப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரஜினி அறிவிப்பை வெளியிட்டு விட்டதால் இப்போதைக்கு கமல்ஹாசனிடம் இருந்து அறிவிப்பு வராது. ஏனெனில் அவ்வாறு அறிவித்தால் அது போட்டி அரசியல் போல் இருவருக்கும் இடையே ஏற்பட்டு விடும்.

    எனவே கமல்ஹாசனின் அரசியல் பிரவேச அறிவிப்பு தாமதமாகத்தான் வெளியாகும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். #Rajinikanthpoliticalentry #RajiniForTamilNadu #TamilNews
    Next Story
    ×