என் மலர்

    சினிமா

    சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது
    X

    சிறந்த நடிப்புக்காக விஷால்-அமலா பாலுக்கு விருது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    2017ம் ஆண்டிற்கான சிறந்த நடிப்புக்காக விஷாலுக்கும், அமலாபாலுக்கும் பிலிம்டுடே விருது வழங்க உள்ளது.
    2017ம் ஆண்டிற்கான பிலிம்டுடே விருது விழா சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் இந்த வருடத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது.

    இந்த வருடத்திற்கான சிறந்த கலைஞர்களுக்கான விருது வருட இறுதியிலேயே வழங்கப்படுவதால், முக்கிய கலைஞர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    விருது பெரும் கலைஞர்கள் விபரம் வருமாறு:-

    சிறந்த நடிகர்: விஷால், படம் துப்பறிவாளன், சிறந்த நடிகை: அமலாபால் படம்: வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே-2, சிறந்த நடிகை (சிறப்பு) தான்ய ரவிச்சந்திரன் படம்: கருப்பன், சிறந்த புதுமுக நடிகை: அதிதி பாலன், படம்: அருவி, புதுமுக நடிகர்: நந்தன் ராம் (பள்ளி பருவத்திலே) சிறந்த வில்லன்: எஸ்.ஜே.சூர்யா (மெர்சல்) சிறந்த வில்லன் சிறப்பு: பிரசன்னா, சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரபு படங்கள்: மாநகரம், அருவி, தீரன் அதிகாரம் ஓன்று, சிறந்த இசைமைப்பாளர்: டி.இமான், சிறந்த இசையமைப்பாளர் (சிறப்பு): அம்ரீஷ், சிறந்த இயக்குனருக்கான விருது பி.வினோத் (தீரன் அதிகாரம் ஓன்று), சிறந்த கமர்சியல் இயக்குனர் கே.வி.ஆனந்த் (கவண்), சிறந்த இயக்குனர் சிறப்பு விருது சுசிகணேசன்

    மற்றும் டி.ராஜேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகரன், குஷ்பு, தேவா, ராதா ரவி, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, உமாபதி, அம்பிகா, யோகிபாபு, முனீஸ்காந்த், ஆர்.கே.சுரேஷ், தமிழருவி மணியன் மற்றும் ஏராளமானோர் விருது பெறுகிறார்கள்.

    இது 2017ம் ஆண்டிற்கான முதல் விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் லக்ஷ்மன் சுருதி குழுவினரின் இன்னிசையில் பல முக்கிய கலைஞர்கள் பாடுகிறார்கள். விழா ஏற்பாடுகளை பிலிம் டுடே ஆசிரியரும், சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், ஏ.ஆர்.பிரபு, சிற்பி, பேரரசு உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×