என் மலர்

    சினிமா

    `குலேபகாவலி படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
    X

    `குலேபகாவலி' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா - ஹன்சிகா நடிப்பில் காமெடி படமாக உருவாகி இருக்கும் `குலேபகாவலி' படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
    கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் படம் ‘குலேபகாவலி’. 

    புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `அறம்' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்  தயாரித்துள்ளது. மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி' படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 



    விவேக் - மெர்வின் இசையில், பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி (நாளை) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

    படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    Next Story
    ×