என் மலர்

    சினிமா

    கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது எப்படி? ரஜினிகாந்த் விளக்கம்
    X

    கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது எப்படி? ரஜினிகாந்த் விளக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி கதாயநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்கள் மத்தியில் பேசுகையில் தனக்கு சினிமா கதாநாயகனாக நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றி விளக்கி கூறினார். அவர் பேசியதாவது:-

    ‘பைரவி’ படத்துக்கு முன்பு நான் வில்லனாக நடித்துக் கொண்டு இருந்தேன். கதாநாயகன் ஆவேன் என்று நானே நினைத்து பார்த்தது கிடையாது. ஏனென்றால் ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் வரவில்லை.

    தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 10, 15 படம் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது ரெயிலில், பஸ்சில், காரில், சில நேரம் லாரியில் கூட சென்று வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனக்குள் ஹீரோ ஐடியாவே இல்லை.

    அப்போது கலைஞானம் சார் என்னிடம் உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன் என கூறினார். எனக்கு ஒரே ஆச்சரியம். ஹீரோவா! சாரி நான் பண்ணலை என்று அவரிடம் கூறினேன். பின்னர் 2 நாள் கழித்து வந்து பார்க்கும் போது எப்படியாவது தட்டிக்கழிக்க வேண்டும் என்று நினைத்தேன்.



    அப்போது நான் 30 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். 50 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்டேன். அப்படி சொன்னால் வர மாட்டார் என்று நினைத்தேன்.

    அதன் பிறகும் 3 நாள் கழித்து என்னை சந்தித்து 30 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.

    வில்லனாக ஸ்ரீகாந்த் நடிப்பார் என்று சொன்னார்கள். ஸ்ரீகாந்த் அப்போது பெரிய நடிகர். அவர் வில்லன் என்றனர்.

    ஸ்ரீபிரியா ஹீரோயின் என்றனர். சரி நான் பண்ணுகிறேன் என்று சொன்னேன். அதன்பிறகு 18 நாள் இருக்கும். ஆறு புஷ்பங்கள் என்று ஒரு படம் எடுத்தனர். நான் அதில் நடித்திருந்தேன். விஜயகுமார் அதில் ஹீரோ. நான் ஷூட்டிங்கில் இருக்கும் போது அவர் வந்து விடுவார். உங்களை பார்த்தார்களா? ஸ்டடி பண்ணினார்களா என்று கேட்பார்.

    அந்த ஆளை போட்டு படம் எடுக்குறியே புத்திகித்தி கெட்டு போச்சா என்று தேவன் சார் சொன்னார். அந்த படம் முடிந்த பிறகு எனக்கு அவரே 2 படத்தில் வாய்ப்பு தந்தார்.

    என்னை திரை உலகத்தில் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர் என்று சொன்னால் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் கலைஞானம் சார் அவர்கள்.



    என்னை ஹீரோ ஆக்கிய பிறகு, படம் ஹிட்டான பிறகு, நிறைய தயாரிப்பாளர்கள் என்னை ஒப்பந்தம் செய்த போது என்னை கலைஞானம் தூரத்தில் இருந்து தான் பார்த்தார். எங்கேயாவது என்னை பார்த்தால் சிரிப்பார். எப்படி இருக்கீங்கன்னு கேட்டால் நல்லா இருக்கேன் என்பார்.

    கால்ஷீட் வேண்டும் என்று என்னிடம் கேட்டதே கிடையாது. தாய் கூட குழந்தை அழுதால்தான் பால் கொடுப்பாள். நான் கேட்கும்போது நன்றாக இருக்கிறேன் என்றதால் நானும் சில நேரம் தப்பு செய்து விட்டேன். அப்பவே நான் அவருடன் மேலும் படம் பண்ணியிருக்க வேண்டும்.

    எனது வளர்ச்சியில் சந்தோ‌ஷப்பட்டு என்னை எப்போதும் வாழ்த்தும் நல்ல உள்ளம் கொண்டவர் அவர். இப்போது கூட ஏதாவது நிகழ்ச்சி என்றால் வந்து காத்திருப்பார்.

    இப்போதும் என்னை பார்க்கும்போது ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். மனதை பக்குவமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பார்.

    ‘ஆடு புலி ஆட்டம்’ படத்தில் மகேந்திரன் வசன கர்த்தா. நான் நடித்துக் கொண்டிருக்கும்போது மகேந்திரன் சார் வந்திருக்கிறார் என்று சொன்னால் டென்‌ஷனாகிவிடும். அப்படி நாடியில் கை வைத்துக் கொண்டே பார்ப்பார். ரஜினி ஸ்டைல் என்பது மகேந்திரன் சார் உருவாக்கியது தான்.



    ‘ஆடுபுலி ஆட்டம்‘ படத்தில் கமல் பெயர் மதன். என்னுடைய பெயர் ரஜினி. அதில் ரஜினி ஸ்டைல் என்று சொல்லி அறிமுகப்படுத்தியதே மகேந்திரன் தான். அதன் பிறகு நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.

    நன்கு பழகிய பிறகு வசனகர்த்தாவாக இருந்த அவர் நான் டைரக்டு செய்தால் நீதான் ஹீரோ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதன் பிறகு ‘முள்ளும் மலரும்‘ படம் வந்தது. அதில் நான்தான் ஹீரோ என்றார்.

    அதற்கு ஒத்துக்கொண்டு ஷூட்டிங் போய் பார்க்கும் போது முதலில் பார்த்த மகேந்திரன் சார் வேறு. அங்கு பார்த்த மகேந்திரன் சார் வேறு. சிங்கம், புலி போல இருந்தார். ஒரு ஷாட் ஓகே சொல்வதற்குள் உயிர் போய்விடும். நான் நினைத்தது, நான் செய்தது நடிப்பு என்று சுற்றிக் கொண்டிருந்தேன். ரசிகர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஓ.கே. ஜனங்களுக்கு பிடித்தால் போதும் என்றிருந்தேன். அது இல்லை.

    எப்போதுமே முன்னால் நின்று பேசி சொல்வதை விட நமக்கு பின்னால் பேசுவதுதான் நமது காதில் வந்து விழும். பின்னால் பேசுவதுதான் நமது மண்டையில் ஏறும். முன்னாடி என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது.



    என்னை உட்கார வைத்து மகேந்திரன் சார், பாலு மகேந்திரா சார் எல்லோரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்த காளி எப்படி பிகேவ் பண்ணுவான் என்று சொல்லி அதைப்பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். எனக்கே தெரியாமல் காளி கேரக்டரை எனக்குள் புகுத்தினார்கள். ‘எனக்குள் கொண்டு வந்து கெட்ட பையன் சார் இவன்’. என்றார்கள். அது தான் மகேந்திரன் சார்.

    எனது நடிப்பை ஒரு அந்தஸ்துக்கு கொண்டு சென்றவர் மகேந்திரன். அதுபோல் ஒரு டைரக்டரை நான் பார்த்தது கிடையாது.

    கே.பாலச்சந்தர் என்னை ஒரு முறை பேட்டி கண்ட போது யாரோட டைரக்ஷனில் நடிக்க ஆசைப்படுவாய் என்று கேட்டார். நான் மகேந்திரன் சார் டைரக்‌ஷனில் நடிக்க ஆசைப்படுவேன் என்று சொன்னேன். அவ்வளவு பெரிய நண்பர். முள்ளும் மலரும் படம் பார்த்த பிறகு கே.பாலச்சந்தர் சார் எனக்கு ஒரு லட்டர் எழுதி இருந்தார். உன்னை நான் அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன் என்று கூறி இருந்தார். அந்த ஒரு பெருமைக்குரியவர் மகேந்திரன்.

    அந்த படம் பார்த்த பிறகு மறைந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா என் வீட்டுக்கு ஒரு பூங்கொத்து அனுப்பி இருந்தார். ‘எக்சலன்ட் பெர் பார்மென்ஸ் வாழ்த்துக்கள்’ என்று வேணுகோபால் செட்டியார் வந்து பூங்கொத்து கொடுத்தார். அந்த பெருமை மகேந்திரன் சாருக்குத்தான். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

    இவ்வாறு ரஜினி பேசினார்.

    Next Story
    ×