என் மலர்

    சினிமா

    கரு வெளியாகும் தேதி அறிவிப்பு
    X

    கரு வெளியாகும் தேதி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். 

    இவரை தமிழில் நடிக்க வைக்க பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் எந்த படத்திலும் நடிக்க வில்லை. இறுதியாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருக்கிறார்கள். சாய் பல்லவி இதில் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார். சத்தமே இல்லாமல் உருவான இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. 

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சாய்பல்லவியுடன் நாகசௌரியா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    Next Story
    ×