என் மலர்

    சினிமா

    பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம்: நாசர்
    X

    பொன்வண்ணனின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மாட்டோம்: நாசர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் சங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் பொன்வண்ணன் அளித்த கடிதத்தை ஏற்க மாட்டோம் என்று சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்.
    நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச் செயலாளராக விஷாலும் பதவியேற்றனர். 

    மேலும் துணைத்தலைவராக பொன்வண்ணன், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட விஷால் அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தலைவரானார். 

    இந்நிலையில், ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக இருக்கும் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21-ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் போட்டியிடப்போவதாக விஷால் திடீரென அறிவித்து வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. விஷாலின் அரசியல் பிரவேசத்திற்கு சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஷால் தேர்தலில் நிற்கும்படியும் அவர்கள் வலியுறுத்தினர். 

    இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பொன்வண்ணன் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட விண்ணப்பித்தது நமது கொள்கைக்கு முரண்பாடான செயல். நடிகர் சங்கம் அரசியல் சார்பற்று செயல்பட வேண்டும் என நாம் எடுத்த முடிவின் படி விஷால் செயல்படாதது அதிர்ச்சி அளிக்கிறது என பொன்வண்ணன் கடிதத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. 

    பதவிக் காலத்தை முடிக்காமல் விலகுவதில் வருத்தமிருந்தாலும், இந்நிலைக்கு தான் தள்ளப்பட்டுள்ளதாக பொன்வண்ணன் வருத்தம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்போது, ‘பொன்வண்ணனின் ராஜினாமா கடித்தத்தை ஏற்க மாட்டோம். ராஜினாமா முடிவை பரிசீலனை செய்யுமாறு பொன்வண்ணனிடம் கூறியுள்ளோம்’ என்றார்.

    விஷால் கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். தனது நிலைப்பாடு குறித்து பொன்வண்ணன் விளக்கம் தருவார். நடிகர் சங்க விதிப்படி தேர்தலில் நிற்பது தவறில்லை’ என்றார்.
    Next Story
    ×