என் மலர்

    சினிமா

    திரையுலகில் கந்துவட்டி ஒழிய 3 பேர் சிறைக்கு செல்ல வேண்டும்: விஷால்
    X

    திரையுலகில் கந்துவட்டி ஒழிய 3 பேர் சிறைக்கு செல்ல வேண்டும்: விஷால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால், திரையுலகில் கந்துவட்டி ஒழிய 3 பேர் சிறைக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
    தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் சங்க கட்டிட பணி வேகமாக நடந்து வருகிறது. அதற்கு நிதி திரட்டும் வகையில் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் 1970-80ம் ஆண்டுகளில் நடித்த பிரபல நடிகர்- நடிகைகள் இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

    ரூ.30 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நடிகர் சங்க கட்டிட பணிகளை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு தான் எனது திருமணம் நடைபெறும்.

    தயாரிப்பாளர் அசோக்குமார் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் நான் கூறுவது என்னவென்றால், தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    நான் இந்த விவகாரம் தொடர்பாக எந்த அமைச்சர் மீதும் புகார் கூறவில்லை. 2011-ம் ஆண்டு கந்துவட்டி பிரச்சினையின் போது அன்புச்செழியன் கைதானார். அப்போது பல அமைச்சர்கள் அவர் வெளியே வர உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளிவந்தது. அதன் அடிப்படையில் தான் இப்போதும் யாரும் அதுபோன்று செயல்பட்டு விட கூடாது என பொதுவாக கூறினேன். மேலும் அந்த வழக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டு விட்டது.

    அது போல இந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படாமல் போய் விடக் கூடாது என்பதற்காக தான் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். பொதுவாக கந்துவட்டி பிரச்சினையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல திரைத்துறையிலும் பலர் கட்டி விடலாம் என நினைத்து உள்ளே நுழைந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

    திரை துறையில் கந்துவட்டி பிரச்சினை ஒழிய 3 பேர் சிறைக்கு சென்றால் சரியாகி விடும். இதற்கு தமிழக அரசு தான்முடிவு கட்ட வேண்டும். சீமான், சுந்தர்.சி போன்றவர்கள் அன்புச்செழியன் பிரச்சினை செய்யக்கூடியவர் அல்ல என்று கூறியுள்ளனர். அதுபோல தான் நானும் அன்பு செழியனிடம் படத்தயாரிப்புக்காக கடன் வாங்கி உள்ளேன்.

    என்னிடம் அவர் எந்த பிரச்சினையும் செய்ததில்லை. என்னிடம் சிறப்பாகவே நடந்து கொண்டார். ஆனால் இதற்காக அசோக்குமார் தற்கொலைக்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட முடியாது. அவரது சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×