என் மலர்

    சினிமா

    மலை உச்சியில் பாடல் கம்போசிங் செய்த ஏ.ஆர்.ரகுமான்
    X

    மலை உச்சியில் பாடல் கம்போசிங் செய்த ஏ.ஆர்.ரகுமான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மணிரத்னம்- ஏ.ஆர்.ரகுமான்-வைரமுத்து கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பாடல் கம்போசிங் கோவா அருகில் உள்ள மலை உச்சியில் நடந்திருக்கிறது.
    ‘காற்று வெளியிடை’ படத்தையடுத்து மணிரத்னம், ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

    தனது படத்தில் பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வெற்றிக்கூட்டணியான கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பாடல் ‘கம்போசிங்’குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்று 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்துவிட்டார்.

    கோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணித்தால், மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை. அந்த மலை உச்சியில், ஒரு மாளிகை. அங்கிருந்து பார்த்தால், அரை வட்டத்துக்கு அரபிக்கடல் தெரியும். 20 சதுர கிலோ மீட்டருக்கு ஆள் நடமாட்டமே கிடையாது.

    இதமான தனிமை-சுகமான காற்று-அழகான காட்சி- சுவையான உணவு. கவிஞர் வைரமுத்து போன்ற கலா ரசிகருக்கு பாட்டு வந்து கொட்டாதா என்ன? ஒரே நாளில் அவர் 6 பாடல்களை எழுதி முடித்தார்.

    2 இரவுகளில் ஏ.ஆர்.ரகுமான் 3 மெட்டு போட்டு இருக்கிறார். “எப்போதும் இளமை அதுதான் கவிஞரின் கவிதை தமிழ்” என்று மணிரத்னம் மகிழ்ந்து இருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் மணிரத்னம் தனது புதிய படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் தொடங்குகிறார்.

    படத்தின் பெயர் என்ன? என்று கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டோம். “தலைப்பில் கவிதை மணக்கும்; ஆனால், அது மணிரத்னம் சொன்னால்தான் இனிக்கும்” என்று கூட்டணி தர்மத்தை மீறாமல் பேசினார், கவிஞர் வைரமுத்து.

    இந்த பாடல்களில் விசேஷம் என்ன? என்று கேட்டோம். “இன்று வரும் பெரும்பாலான பாடல்கள் ஒலித்தீனியாக மட்டுமே இருக்கின்றன. அதோடு சேர்த்து மொழித்தீனியும் வேண்டாமா? இதயம்-காது இரண்டையும் நிரப்ப வேண்டும் ஒரு பாட்டு. காதுக்கு இசை; இதயத்துக்கு தமிழ். அந்த இரண்டும் இந்த பாடல்களில் ஈடேறும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

    மணிரத்னம்-வைரமுத்து-ஏ.ஆர்.ரகுமான் என்று 25 ஆண்டுகள் கடந்த இந்த மெகா கூட்டணி, 26-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

    மணிரத்னத்துக்கு இது இன்னொரு ‘அக்னி நட்சத்திரம்’ என்று மட்டும் சொல்லி முடித்தார், கவிஞர் வைரமுத்து.
    Next Story
    ×