என் மலர்

    சினிமா

    விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை
    X

    விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சசிகுமாரின் மைத்துனர் அசோக் குமார் தற்கொலையை அடுத்து கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும், கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் முடிவு கட்டுவோம் என்று அறிக்கை விடுத்துள்ளார்.
    நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வந்த, அசோக்குமார் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமை தான் காரணம் என்றும், அதுகுறித்து அசோக்குமார் எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்திருக்கிறது. அதில் தற்கொலைக்கு அன்புச்செழியனின் தொல்லை தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

    அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் அசோக் குமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்!

    கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இன்று தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.



    எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும்.

    காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலை அல்ல. கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    - விஷால் தலைவர், தயாரிப்பாளர் சங்கம்

    இவ்வாறு கூறியிருக்கிறார்.
    Next Story
    ×