என் மலர்

    சினிமா

    திருநெல்வேலி அல்வா, குற்றால அருவியை மறக்க முடியாது: ரசிகர்கள் மத்தியில் கார்த்தி பேச்சு
    X

    திருநெல்வேலி அல்வா, குற்றால அருவியை மறக்க முடியாது: ரசிகர்கள் மத்தியில் கார்த்தி பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருநெல்வேலி அல்வா, குற்றால அருவியை என்னால் மறக்க முடியாது என்று நெல்லை தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் கார்த்தி பேசினார்.
    நடிகர் கார்த்தி, நடிகை ராகுல் ப்ரீத்சிங் நடித்த “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற திரைப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் காட்சி திரையிடப்பட்டு கொண்டு இருந்தது. அப்போது இடைவெளியில் நடிகர் கார்த்தி தியேட்டருக்கு வந்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். பின்னர் அவருடன் கைகுலுக்கினர். அப்போது சிலர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் பேசியதாவது:-

    உங்களை பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தீரன் படம் நல்லபடியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆதரவு கொடுத்த பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படம் காவல்துறை மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புதிய பட சூட்டிங் குற்றாலத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக வந்தேன். அப்படியே உங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் தியேட்டருக்கு வந்தேன்.



    எனக்கு நெல்லை புதிதல்ல. என்னுடைய கல்லூரி நண்பர்கள் ஏராளமானவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களை பார்க்க அடிக்கடி இங்கு வந்து இருக்கிறேன். தாமிரபரணி ஆறு, மகராஜநகர், இருட்டுக்கடை அல்வா, குற்றாலம் அருவி ஆகியவற்றை என்னால் மறக்க முடியாது. நான் நடிக்கும் படத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுங்கள். உங்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், ராம் தியேட்டர் உரிமையாளர்கள் ராமசாமி ராஜா, முத்துராமலிங்கம், மேலாளர் கிருஷ்ணன் மற்றும் கார்த்தி, சூர்யா, ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ராம் தியேட்டர் வந்த கார்த்திக்கு மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×