என் மலர்

    சினிமா

    பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம்: திரிஷா
    X

    பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம்: திரிஷா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    யூனிசெப்பின் நெல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்ட திரிஷா, பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
    நடிகை திரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக கொரவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றை தடுக்கும் முயற்சியில் திரிஷா செயல்பட இருக்கிறார். தென்னிந்தியாவில் யூனிசெப்பின் இந்த கௌரவத்தை பெறும் முதல் திரை நட்சத்திரம் திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிகழ்ச்சியில் திரிஷா பேசுகையில், "இது எனக்குப் பெரிய கவுரவம். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி, சுகாதாரம், குழந்தைகள் பாதுகாப்புக்காக தொடர்ந்து நான் குரல் கொடுப்பேன். பெண் குழந்தைகள் 18 வயது வரை கட்டாயம் கல்வி பயின்றால் குழந்தை திருமண முறையை ஒழித்துவிடலாம்," என்றார்.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதன் காரணமே விழிப்புணர்வு இன்மைதான். அதேபோல் பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்றார்.
    Next Story
    ×