என் மலர்

    சினிமா

    ‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
    X

    ‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பத்மாவதி’ படத்தை மறு தணிக்கை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
    ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற பெயரில் தயாராகி உள்ள இந்தி படத்தை அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி நாடு முழுவதும் திரையிடப்போவதாக அறிவித்து உள்ளனர். ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே நடித்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள இந்த படத்தை ராஜஸ்தான், குஜராத், மராட்டிய மாநிலங்களில் வசிக்கும் ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா, ராஜ்புத் சேனா, கர்னி சேனா அமைப்பினரும் களம் இறங்கி உள்ளனர். இந்த பிரச்சினை இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணி பத்மினி வரலாறை தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினி, அழகும் வீரமும் நிறைந்தவர். ராஜபுத்திர பேரரசரான ரத்தன்சிங்கை மணந்து சித்தூருக்கு ராணியாகிறார். ராணி பத்மினி அழகை கேள்விப்பட்டு டெல்லி பேரரசன் அலாவுதீன் கில்ஜி சித்தூருக்கு படையெடுத்து ரத்தன் சிங்கை கைது செய்து அடிமையாக அழைத்துச் செல்கிறான். ராணி பத்மினி டெல்லி மீது படையெடுத்து கணவனை மீட்டு வருகிறார்.

    ஒரு பெண் தன்னை தோற்கடித்ததால் ஆத்திரத்தில் பெரும்படையுடன் சித்தூர் மீது படையெடுக்கிறான் அலாவுதீன் கில்ஜி. அந்த படையுடன் தன்னால் போரிட முடியாது என்று உணர்ந்து ராணி பத்மினி ஆயிரக்கணக்கான பெண்களுடன் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு இருக்கிறது.



    இதனால் ராணி பத்மினியை ராஜஸ்தானில் உள்ள ஒரு பிரிவினர் தெய்வமாக வழிபடுகிறார்கள். ராணி பத்மினி வரலாறு ஒரு கற்பனை கதை என்றும் சிலர் கூறுகிறார்கள். பா.ஜனதா எம்.பி சிந்தாமணி மல்வியா தனது பேஸ்புக் பக்கத்தில் பத்மாவதி படத்தின் சர்ச்சை கதை பற்றி கூறியிருப்பதாவது:-

    “ராணி பத்மினியை கவர்ந்து செல்ல இஸ்லாமிய மன்னரான அலாவுதீன் கில்ஜி சித்தூர் மீது படையெடுத்ததால் தனது மானத்தை காப்பாற்றிக்கொள்ள ராணி பத்மினி தன்னைத்தானே தீயிட்டு எரித்து மாண்டு போனதாகவும் அவரைப்போலவே ஆயிரக்கணக்கான பெண்களும் தீயில் இறங்கியதாகவும் வரலாறு உள்ளது.

    ஆனால் பத்மாவதி படத்தில், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி வரலாற்றையே திரித்து அலாவுதீன் கில்ஜியுடன் பத்மினிக்கு காதல் ஏற்பட்டதாக காட்டி இருக்கிறார். இது நமது பெண்களின் தியாகத்தையும், கவுரவத்தையும் சிதைக்கும் செயல் ஆகும்”.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    இதனால்தான் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி தியேட்டர்களில் தாக்குதல்கள் நடந்து வருகிறது. கர்னி சேனா அமைப்பினர் படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேயின் மூக்கை அறுப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த சத்திரிய சமாஜ் அமைப்பு, டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனே தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

    பத்மாவதி படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று உத்தரபிரதேச அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. ராஜஸ்தான் அரசும் படத்துக்கு எதிரான கருத்துகளையே வெளியிட்டு உள்ளது. இதனால் பத்மாவதி படம் திட்டமிட்டபடி டிசம்பர் 1-ந் தேதி வெளியாகுமா? என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டு உள்ளது.

    இந்த படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் பத்மாவதி படத்தை தடைசெய்யும்படி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வக்கீல் எல்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில் பத்மாவதி படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×